மாறுபட்ட கோணம்..கஸ்டடிக்குள் போன அசோக்? ரகசிய இடத்தில் விசாரணையா? செந்தில் பாலாஜியால் பயங்கர டென்ஷன்
சென்னை: செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைதாகி உள்ள நிலையில், 2 விதமான சிக்கல்களை இந்த கைது நடவடிக்கை எழுப்பியுள்ளதாக கருதப்படுகிறது.. அத்துடன் சில முக்கிய தகவல்களும் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.
செந்தில் பாலாஜியிடம் விசாரணையை நடத்தி முடித்த உடனேயே, அவரது தம்பி கைதாகி உள்ளார்.. அப்படியானால், விசாரணையின்போது, செந்தில் பாலாஜி ஏதாவது "வார்த்தையை" விட்டாரா? என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளன.

கரூர் வீடு: ஏற்கனவே விசாரணையின்போது, "கரூர் வீடு உள்ள நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கியது யார்?" என்று கேட்டதற்கு எனக்கு தெரியாது என்றுதான் செந்தில் பாலாஜி சொன்னாரே அதை யார் வாங்கியது என்ற கேட்டதற்கு, தான் வாங்கவில்லை என்று பதிலளித்தாரே தவிர, தன்னுடைய தம்பி பெயரை சொல்லவேயில்லையாம்.. இப்போது திடீரென அவரது தம்பி கைதாகி உள்ளதால், இதன் பின்னணி என்ன? என்ற ஆர்வம் எழுந்துள்ளது.
செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்கை கைது செய்யப்பட்டதாக நேற்று தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.. இப்போதுவரை அந்த பரபரப்பும், அதையொட்டிய சலசலப்பும் நீங்கவில்லை. உண்மையை சொல்லப்போனால், அவர் கைது செய்யப்படவில்லை, ஆனால், அவரை சுற்றி வளைத்திருக்கிறது அமலாக்கத்துறை.. ஏற்கனவே 4 முறை சம்மன்களை அனுப்பியும் அசோக் ஆஜராகவில்லை... டிமிக்கி கொடுத்தப்படி இருந்து வந்தார் அசோக்.
அசால்ட்: அதேசமயம், மத்திய உளவுத்துறையினர் அசால்ட்டாக இருந்துவிடவில்லை.. அசோக்கின் இருப்பிடத்தையும் அவர் எங்கெங்கு பயணிக்கிறார் என்பதையும் கடந்த 2 மாதங்களாகவே கண்காணித்தபடியேதான் இருக்கிறார்கள்.. அதனால், மத்திய அரசின் கண்காணிப்பில் இருந்து முழுவதுமாக மறைந்துவிடவில்லை.
செந்தில்பாலாஜியை கஸ்டடி எடுத்து விசாரணை முடிந்தபிறகே அசோக் விவகாரத்தை டீல் செய்ய வேண்டும் என்பது அமலாக்கத்துறையினர் ஆரம்பத்திலேயே எடுத்த முடிவாக இருந்துவருகிறது.. அதன்படி, செந்தில் பாலாஜியின் கஸ்டடி முடிந்து மறுபடியும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.. உடனடியாக, சூட்டோடு சூடாக, அசோக் மீது சீரியஸ் காட்டப்பட்டது..
சிகிச்சையில் அசோக்: மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாக கடந்த 15 நாட்களாகவே கேரளாவில் ஆயூர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம் அசோக். இதற்கான ஏற்பாடுகளை, அசோக்கின் கான்ட்ராக்டர் நண்பர் ஒருவரே செய்திருந்தார். அவரது பாதுகாப்பில்தான், இந்த சிகிச்சையை அசோக் எடுத்து வந்துள்ளார்.. சிகிச்சை முடிந்து, கடந்த 2 நாட்களாக கொச்சி விமானநிலையத்திற்கு அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்திருக்கிறார் அசோக்.
அடுத்த வாரம் சிங்கப்பூர் செல்லவும் அவர் திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. வெளிநாட்டுக்கு அசோக் தப்பிச்செல்ல வாய்ப்பிருப்பதாக கருதி, அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸை முன்னதாகவே அனுப்பி இருந்தனர்.. இதனால் விமான நிலையங்களில் அசோக் குமார் பாஸ்போர்ட் குறித்த தகவல்களுடன் தீவிரமாக கண்காணிக்கப்பட்டே வந்தது.
சுற்றி வளைப்பு: எதிர்பார்த்தபடியே, அசோக் சிங்கப்பூருக்கு செல்லவிருக்கும் தகவலை, மோப்பம் பிடித்துவிட்ட, கேரள மாநில அமலாக்கத்துறை, அசோக்கை கேரள மாநிலத்திலேயே உடனடியாக வளைத்துள்ளது.. தமிழகத்திலிருந்து அமலாக்கத்துறையினர் கேரளாவுக்கு சென்றால், அந்த பயணம் எப்படியும் வெளியே தெரிந்து விடும். அதனால் அசோக் தப்பிக்க வழி உண்டு. அதனால்தான், அவரை வளைக்க, கேரள அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே அலர்ட் செய்யப்பட்டிருந்தது.
இதன்படியே, மத்திய உளவுத்துறையின் உதவியுடன் அமலாக்கத்துறையினரால் நேற்று வளைக்கப்பட்டிருக்கிறார் அசோக். இந்த விஷயம், தமிழகத்தில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரகசிய விசாரணை: கேரளாவில் சிக்கியுள்ள அசோக்கை, உடனடியாக கைது செய்யவில்லை... காரணம், கைது செய்தால் 24 மணி நேரத்துக்குள் ரிமாண்ட் செய்யப்பட வேண்டும். அதனை அமலாக்கத்துறையினர் விரும்பவில்லை. அதனால், ரகசியமாகவே விசாரித்து வருகிறார்களாம்.. மேலிடம் எப்போது சொல்கிறதோ அப்போது கைதை அதிகாரப்பூர்வமாக காட்டுவார்கள் என்கின்றன தகவல்கள்.
அதேசமயம், செந்தில் பாலாஜி தம்பி மீதான இந்த அதிரடி நடவடிக்கையானது, திமுகவிலும் பெருத்த அதிர்ச்சியை தந்துவருகிறது.. அமைச்சர் என்ற முறையில், செந்தில் பாலாஜி குறித்து வேண்டுமானால், திமுக தரப்பு ரியாக்ட் செய்ய முடியுமே தவிர, அவரது தம்பி விஷயத்தில் எந்தவிதமான சப்போர்ட்டையும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தரமுடியாத சூழல் உள்ளது..
திமுக கப்சிப்: எனவே, அசோக் விஷயத்தில் திமுக அடக்கி வாசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அசோக் மீதான கைது நடவடிக்கையை முன்னெடுப்பதே, திமுகவுக்கு சிக்கலை உண்டுபண்ணதான் என்றும் தகவல்கள் கூறுகின்றன..
செந்தில் பாலாஜி விஷயத்திலேயே திமுகவால் ஒரு அளவுக்கு மேல் சப்போர்ட் செய்து பேசமுடியாத சூழலில், அவரது தம்பி, மற்றும் அவரது தம்பி மனைவி விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளபட்சத்தில், "சைலண்ட்" மோடிலேயே திமுக இருக்க வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
முன்னதாக, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடந்தபோதுதான், அசோக் எங்கெங்கு செல்வார்? அவருடன் யார் யாரெல்லாம் தொடர்பில் இருப்பார்கள் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் கேரள மாநிலம் கொச்சியில் அசோக் இருக்கும் தகவலை அறிந்து சுற்றிவளைத்ததாக கூறுகிறார்கள்.
நேற்றைய தினம், அசோக்கை டெல்லி அல்லது சென்னைக்கு கொண்டு சென்று விசாரிக்கலாம் என்று தகவல் வெளியாகவும், நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் பாதுகாப்பை பலப்படுத்த நுங்கம்பாக்கம் போலீசாரும் உஷார் ஆனார்கள். ஆனால் இரவு 10 மணிக்கு பிறகு மாறுபட்ட தகவல்கள் வெளியானது... அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அசோக் எங்கள் பிடியில் இல்லை என்று மட்டும் சொன்னதாக, தெரிகிறது. இதற்குபிறகுதான், சாஸ்திரிபவன் பகுதியில் பரபரப்பு மெல்ல அடங்கியது..
விசாரணை: இதனிடையே, மத்திய உளவுத்துறை போலீசாரின் கட்டுப்பாட்டில் அசோக் இருப்பதாகவும் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. அவர்கள் விசாரித்த பிறகே அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications