துருப்பு சீட்டே "இவர்தான்".. அவரை கைகாட்டினாராமே செந்தில் பாலாஜி.. சீக்ரெட்டை சொன்ன புள்ளி.. போச்சு?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அவர் கைது செய்யப்படவோ அல்லது காவலில் வைக்கப்படவோ இல்லை என்று அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 3000 பக்க விசாரணை அறிக்கையை ட்ரங்க் பெட்டி ஒன்றில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விசாரணையில் கூறிய விஷயங்கள் கூற மறுத்த விஷயங்கள் ஆகியவை எல்லாம் மொத்தமாக டைப் செய்யப்பட்டு அதன் முடிவுகளும் விவரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார்: இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பிய அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. அசோக்கிற்கு 3-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனின் கெடு 27-ந்தேதி முடிவடைந்தது. அதற்குள் அமலாக்கத்துறையின் இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அவர் ஆஜராக வேண்டும். 27-ந்தேதி வரை தான் அவருக்கு கடைசி கெடு ஆனால் அவர் ஆஜராகவில்லை.
அன்றைய தினம் அவர் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தால், அவரை தலைமறைவு குற்றவாளியாகவும், தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அறிவிக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறதாம். 27-ந்தேதி ஆஜராகச் சொல்லி அனுப்பப்பட்ட சம்மனுக்கு, இதய நோய் சிகிச்சையில் நான் இருந்து வருவதாலும், அந்த சிகிச்சை முடிய சில மாதங்கள் ஆகுமென்பதாலும் நேரில் ஆஜராக 6 மாத கால அவகாசம் தர வேண்டும் என கடிதம் மூலமாக கோரிக்கை வைத்தார் அசோக். இந்த நிலையில்தான் அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வந்தன.
மறுப்பு: ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், செந்தில் பாலாஜி தம்பியை அமலாக்கத்துறை கைது செய்யவில்லை. இதில் மீடியா ஏமாந்துவிட்டது. அசோக் குமாரை கேரளாவில் கைது செய்துவிட்டதாக மீடியா சொன்னது. அதிமுகவில் சிலர் சொல்லித்தான் இந்த விஷயத்தை வெளியிட்டனர்.
ஆனால் யாருமே இந்த விவகாரத்தில் செய்தியை உறுதிப்படுத்தவில்லை. அமலாக்கத்துறை இதை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும் உறுதி செய்யாமல் இவர்கள் செய்தி வெளியிட்டனர். இது கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. இப்போது அமலாக்கத்துறை இதை மறுத்து உள்ளது. இதுவரை அசோக் செந்தில் பாலாஜியை பார்க்காமல் இருக்கிறார்.
அசோக் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. ரெய்டின் தொடக்கத்தில் இருந்தே அசோக் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் வீட்டில் பல முறை ரெய்டு நடத்தியும் கூட அசோக் ஆஜராகவில்லை. அசோக் பிடிபட்டால்தான் செந்தில் பாலாஜிக்கு அழுத்தம் குறையும். ஆனால் அசோக் ஆஜராகவில்லை.
அமலாக்கத்துறை இதில் பிடிவாரண்ட் போடலாம். சிபிஐ பிடிவாரண்ட் போட சொல்லலாம். ஆனால் அசோக் எங்கே? இந்த வழக்கில் துருப்புசீட்டு அசோக்தான். இது சின்ன கேஸ். வெறும் ஒன்றரை லட்சம் மதிப்பிலான கேஸ். இதை செந்தில் பாலாஜி, திமுக சரியாக கையாண்டு இருக்கலாம்., இது திமுகவிற்கு தற்போது கொதிப்பை, ஏமாற்றத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி அசோக்கை நம்பினார். அசோக்கை அவர் கைகாட்டி இருப்பார் என்று சிலர் சொல்கிறார்கள். செந்தில் பாலாஜி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை. செந்தில் பாலாஜி எனக்கும் இந்த வழக்கிற்கும், என் தம்பிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறி இருக்கலாம். தம்பியை கைகாட்டிவிட்டு செந்தில் பாலாஜி தப்பிப்பாரா என்பது சந்தேகம். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை, என்று பத்திகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கொந்தளித்த அண்ணாமலை.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே.. நீட் மறுதேர்வால் மத்திய அரசுக்கு வார்னிங் -
ஜூலையில் அரசியல் களம் சூடுபிடிக்கும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை! -
நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி புகார்.. சென்னை, மதுரையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications