"பயில்வான்".. மேலே இருக்கவன் பார்த்துப்பான்.. யோசித்த செந்தில் பாலாஜி.. திமுக கொதிக்குதாமே!
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் தனது தம்பி அசோக் மூலம் வரும் அபாயத்தை செந்தில் பாலாஜி உணரவில்லை. செந்தில் பாலாஜியின் வேகம், அலட்சியம் இல்லை என்றால் இப்படி நடந்து இருக்காது, என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கூறியுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 14 தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யபட்டார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் திங்கள் கிழமை அன்று செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கதுறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து கடந்த 7 தேதி இரவு முதல் அமலாக்க துறை தன்னுடைய காவலில் எடுத்து விசாரித்தது. 5 நாட்களாக அவரிடம் தீவிரமாக கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 3000 பக்க விசாரணை அறிக்கையை ட்ரங்க் பெட்டி ஒன்றில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விசாரணையில் கூறிய விஷயங்கள் கூற மறுத்த விஷயங்கள் ஆகியவை எல்லாம் மொத்தமாக டைப் செய்யப்பட்டு அதன் முடிவுகளும் விவரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

பேட்டி: செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கு குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், செந்தில் பாலாஜி தம்பியை அமலாக்கத்துறை கைது செய்யவில்லை. இதில் மீடியா ஏமாந்துவிட்டது. அசோக் குமாரை கேரளாவில் கைது செய்துவிட்டதாக மீடியா சொன்னது. அதிமுகவில் சிலர் சொல்லித்தான் இந்த விஷயத்தை வெளியிட்டனர். செந்தில் பாலாஜி தனது தம்பி அசோக்கை அதிகம் நம்பி இருந்தார். அவர் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று நினைத்தார். அதுதான் பிரச்சனையே.
ஒரு படத்தில் பயில்வான் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான் என்று சொல்வாரே. அப்படித்தான் இங்கேயும் நடந்தது. அசோக் மூலம் வரும் அபாயத்தை செந்தில் பாலாஜி உணரவில்லை. செந்தில் பாலாஜியின் வேகம், அலட்சியம் இல்லை என்றால் இப்படி நடந்து இருக்காது.

எல்லா விவகாரத்தையும் தம்பி பார்த்துப்பான் என்று செந்தில் பாலாஜி நினைத்தார். ஆனால் அசோக் குமாரையே பார்க்க முடியவில்லையே. தம்பியை செந்தில் பாலாஜி அதிகம் நம்பினார். அவரிடம் பலர் பேசினார்கள். ஆனால் செந்தில் பாலாஜி இதை கேட்கவில்லை.
இந்த வழக்கில் டெல்லி செல்ல வேண்டாம் என்றார்கள். ஆனால் அவர் கேட்கவில்லை. அவருக்கு எதிரான பிடி இறுக்கமாகிக்கொண்டு இருக்கிறது. அசோக் எங்கே? இந்த வழக்கில் துருப்புசீட்டு அசோக்தான். இது சின்ன கேஸ். வெறும் ஒன்றரை லட்சம் மதிப்பிலான கேஸ். இதை செந்தில் பாலாஜி, திமுக சரியாக கையாண்டு இருக்கலாம்., இது திமுகவிற்கு தற்போது கொதிப்பை, ஏமாற்றத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2024 லோக்சபா தேர்தல் முடிவு வரும் வரை செந்தில் பாலாஜி சிறையில்தான் இருப்பார். இது அண்ணாமலையே சொன்னது.மே 10 - 15ல் ரிசல்ட் வரும் வரை செந்தில் பாலாஜி வெளியவே வர மாட்டார். அவரை உள்ளேதான் வைத்து இருப்பார்கள். இவரை வெளியேவிட்டால் கொங்கில் செந்தில் பாலாஜி வெறித்தனமாக வேலை செய்வார். அதை விட மாட்டார்கள். அவரை எப்படி வெளியே விடுவார்கள்.
இதுதான் பாஜகவின் கணக்கு. அதிமுகவின் கோரிக்கையும் இதுவாகவே இருக்கும். செந்தில் பாலாஜியை விட்டால் நாம் கொங்கில் தோல்வி அடைவோம் என்று நினைக்கிறார்கள். அதனால் இந்த வழக்கில் அவருக்கு பெயில் கிடைத்தாலும் மீண்டும் வேறு வழக்கில் அவரை கைது செய்வார்கள், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி புகார்.. சென்னை, மதுரையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications