Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Soundarya: நடிகை சவுந்தர்யா இளம் வயதிலேயே இறப்பார்னு முன்கூட்டியே ஒருவருக்கு தெரியுமாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சவுந்தர்யா மரணத்தை ஒருவர் முன்கூட்டியே கணித்தாரா? என்பதை பார்க்கலாம். சவுந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல! அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என ஆந்திராவை சேர்ந்த நபர் ஒருவர் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தவர் சவுந்தர்யா. அழகான முகத் தோற்றம், சிரிப்பழகி, நடிப்பில் சாவித்திரி அளவுக்கு புகழ் பெற்றவர். எந்த பேஷன் உடைகளையும் அணியாமல் தாவணி, புடவை, பேன்ட் சர்ட் உள்ளிட்டவைகளை அணிந்தே அவர் புகழ் பெற்றார்.

Soundarya mohan babu

பெங்களூரை சேர்ந்த சவுந்தர்யா முதலில் கன்னட படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன. இப்படியே மலையாளம், தமிழ் என தென்னிந்திய திரையுலகையே தனது அசாத்திய நடிப்பால் கட்டி போட்டிருந்தார்.

முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, ரஜினி, கமல், மோகன்லால், வெங்கடேஷ் பாபு, நாகார்ஜுனா, ஸ்ரீகாந்த், ஜெகபதிபாபு, அமிதாப் பச்சன், விஷ்ணுவர்தன் உள்ளிட்டோருடன் நடித்திருந்தார். தனது 20 ஆண்டு திரை வாழ்க்கையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இந்தியில் அமிதாப் பச்சனுடன் சூர்யவம்சம் படத்தில் தேவயானி கதாபாத்திரத்தில் சவுந்தர்யா நடித்திருந்தார். அதன் பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தவுடன் அரசியலில் கவனம் செலுத்தினார். 2003 ஆம் ஆண்டு சாப்ட்வேர் என்ஜினியரான ஜி.எஸ்.ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2004 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த சவுந்தர்யா, அதே ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி கட்சி பிரச்சாரத்திற்கு கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் தனது சகோதரர் அமர்நாத்துடன் சென்ற போது விபத்து ஏற்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்தில் சவுந்தர்யாவும் அவரது சகோதரர் அமர்நாத்தும் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. திருமணமான ஒரே ஆண்டில் சவுந்தர்யா இறந்தது அவரது குடும்பத்தினரையும் புரட்டி போட்டது. மேலும் இறந்த போது அவர் கர்ப்பமாக இருந்தாராம்.

இது யாருமே எதிர்பார்க்காத விபத்து என்றாலும் சவுந்தர்யா இறந்து போவார் என்பது ஒருவருக்கு முன்கூட்டியே தெரியுமாம். அவர் வேறு யாருமில்லை அவருடைய தந்தை கே.எஸ்.சத்தியநாராயணாதான். சவுந்தர்யாவின் ஜாதகப்படி அவர் இறந்துவிடுவார் என ஜோதிடர்கள் அவரது தந்தையிடம் முன்பே கூறியிருந்தனராம். ஆனால் அவர் இதை நம்பாமல் இருந்தாராம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் ஜோதிடத்தில் குறிப்பிட்டது போல் மகள் இளம்வயதிலேயே இறந்ததும் அவருடைய தந்தைக்கு குற்ற உணர்ச்சி எப்படி இருந்திருக்கும்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+