அனுபவம் இல்லாததை காட்டிட்டாரே.. அவசரப்பட்டு விஜய் எடுத்த முடிவு.. இப்போ எல்லாம் ஓவர்? என்னாச்சு?
சென்னை: விஜய்தான் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று கடந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. விஜயின் அனுமதி இல்லாமல் செயற்குழு உறுப்பினர்கள் இப்படி ஒரு குறைவை எடுக்க முடியாது. இதன் மூலம் ஆந்திர அரசியலில் பவன் கல்யாண் தொடக்க காலங்களில் செய்த அதே அரசியல் தவறை விஜய் இப்போது செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி அவசரப்பட்டு எடுத்திருக்கும் இந்த முடிவை அந்த கட்சிக்கு பெரிய அனுபவம் இல்லை என்பதை காட்டுகிறது. அதோடு கூட்டணி வைக்க திட்டமிடும் விஜய் இந்த முடிவை அவசரப்பட்டு எடுத்திருப்பது தவறான முடிவாக பார்க்கப்படுகிறது.
1. தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக, பாஜகவிற்கு எதிரானதாகத்தான் எப்போதும் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கொள்கை எதிரியான பா.ஜ.க-வுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் என்றைக்கும் கூட்டணி கிடையாது; தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து பா.ஜ.க அரசியல் செய்வதை ஏற்க முடியாது
2. சுயநல அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க-வுடன் கூடிக் குலைந்து கூட்டணி வைக்க த.வெ.க ஒன்றும் தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ இல்லை. தவெக தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக மற்றும்
பாஜகவிற்கு எதிரானதாகதான் இருக்கும்.

3. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பாஜகவின் அரசின் செயலை தவெக ஏற்றுக் கொள்ளாது, கீழடி விவகாரத்தில் தமிழர்களின் உண்மையை மறைக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தவெக கூட்டணி எப்போதும் திமுக, பாஜகவுக்கு எதிராகவே இருக்கும்; பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பாஜகவின் அரசின் செயலை தவெக ஏற்றுக் கொள்ளாது, என்று த.வெ.க தலைவர் விஜய் பேசி உள்ளார்.
அதிமுக உடன் கூட்டணிக்கு வாய்ப்பா?
4. ஆனால் அதே சமயம் அவர் அதிமுக உடன் கூட்டணி வைக்கவும் இன்னமும் வாய்ப்புள்ளது. விஜயின் செயற்குழு பேச்சில் ஒரு இடத்தில் கூட அதிமுக என்ற வார்த்தையே இல்லை. இதனால் அதிமுக - விஜய் கூட்டணி உருவாகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு பக்கம் பாஜக - அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப் போவதாக தகவல்கள் வர தொடங்கி இருந்தன.
5. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்ததாக. ஆகஸ்ட் இறுதிக்குள் இதில் முடிவெடுக்க டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம். அதாவது ஆகஸ்ட் இறுதிக்குள் ஆம் - இல்லை என்று முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் களப்பணிகளை செய்ய முடியும் என்பதால் இந்த நாள் குறிக்கப்பட்டு உள்ளதாம்.
6. விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக மேலிடம் முயன்று வருகிறதாம். ஆனால் இப்போது பாஜகவிற்கு விஜய் நோ சொல்லி உள்ளார். எனவே பாஜக லிஸ்டில் இல்லை. இதனால் ஒருவேளை பாஜக இல்லாத.. அதிமுக - விஜய் என்ற புதிய கூட்டணி உருவாகுமோ என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனென்றால் அண்ணா, பெரியாரை விமர்சனம் செய்தது, முருகர் மாநாடு என்று பல விஷயங்களில் பாஜக - அதிமுக இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
7. இதனால் அதிமுக பாஜக கூட்டணியை உடைத்து தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி வைத்தாலும் வியப்பில்லை. ஆனால் இங்குதான் வேறு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதே சமயம் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் எடுத்துள்ள முடிவு அதிமுகவிற்கு சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
8. முன்னதாக தவெக செயற்குழு கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அதிமுக - பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டு வந்த நிலையில், அந்தக் கூட்டணியில் தவெக இணையாது எனத் தெரிகிறது.
9. அதிமுக உடனும் இதனால் கூட்டணி அமைக்க வாய்ப்பு குறைவுதான் என்பதால் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விஜய் அவசரப்பட்டு முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டதால் அந்த கட்சியின் கதவுகள் மூடப்பட்டு உள்ளது.
10. அதாவது விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் மட்டுமே கூட்டணிக்கு வரும். ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு. ஏனென்றால் பவன் கல்யாண் முதல்வர் வேட்பாளர் என்று கூறிய போதெல்லாம் ஆந்திர அரசியலில் வெற்றிபெறவில்லை. அவர் துணை முதல்வர் என்ற அளவிற்கு இறங்கி போன பின்பே வெற்றிபெற்றார். பவன் தொடக்க காலங்களில் செய்த அதே அரசியல் தவறை விஜய் இப்போது செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications