பஸ்ல பாருங்க.. பயணியை தரதரன்னு இழுத்து, "கழுத்தை" அடித்து நொறுக்கும் செக்கிங் இன்ஸ்பெக்டர்.. வீடியோ
சென்னை: பயணியை, தரதரவென இழுத்துசென்று, சரமாரி தாக்கிஇருக்கிறார்கள் செக்கிங் ஆபீசர்ஸ்.. கிண்டியில் இந்த கொடுமை நடந்துள்ளதாக கூறி, வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் போலீசில் ஒரு புகார் தந்துள்ளார்.. அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது:

தினேஷ்:
எனது பெயர் தினேஷ். நான் மறைமலை நகரில் வசித்து வருகிறேன். தற்சமயம் நான் அடையாறில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். அதனால் எனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு பேருந்து வாயிலாக தான் பயணம் செய்து வருகிறேன்.
இன்றும் பணிக்கு செல்வதற்காக மறைமலைநகர் ரயில் நிலையத்திலிருந்து கிண்டி வந்து, அங்கிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது சின்னமலை பேருந்து நிறுத்தத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டர், டிக்கெட் சோதனையில் இருந்தனர்.
செக்கிங் இன்ஸ்பெக்டர்:
பேருந்து கூட்டமாக இருந்ததால், கிண்டியில் இருந்து டிக்கெட் எடுப்பதற்கு பணத்தை கொடுத்தபோது கூட்டத்தில் டிக்கெட் வரவில்லை.. நடத்துனர் டிக்கெட் வந்து கொடுக்கிறேன் என்று கூறியதாய், உடனிருந்த டிக்கெட் எடுக்காத பயணிகள் கூறியதால் நின்று கொண்டிருந்தேன்.
ஆனால், அதற்குள் செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்து டிக்கெட் கேட்டதால் என்னால் கொடுக்க முடியவில்லை. ஆனால் நான் சொல்வதை சிறிதும் காது கொடுத்து கேட்காமல் செக்கிங் இன்ஸ்பெக்டர் எனது பேக் மற்றும் மொபைல் போனை எடுக்க முயற்சி செய்தனர்.. என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில், இருந்தபோது, இன்னொரு செக்கிங் இன்ஸ்பெக்டர் எனது பேக்கை எடுத்துச்சென்று விட்டார்.

காயப்படுத்தினார்கள்:
வேறு வழியின்றி, நான் அவருக்கு பின்னாலே சென்றதும், என்னுடைய சட்டைடையை பிடித்து இழுத்து என்னை கீழே தள்ளி, அடித்து காயப்படுத்தியது மட்டுமின்றி தகாத வார்த்தைகளில் என்னை பேசி காயப்படுத்தினர். அப்போது எனது பொருட்கள் கீழே விழுந்து விட்டது. அதனை எடுக்க நான் முயற்சி செய்தபோது, எனது கழுத்தைப்பிடித்து மீண்டும் என்னை தாக்கினர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கூறியும்கூட செக்கிங் இன்ஸ்பெக்டர் எதையும் கண்டுகொள்ளவில்லை.
என்னை தாக்குவதிலேயே குறியாய் இருந்தனர். இறுதியாய் பொதுமக்கள் தடுத்ததால், தான் செக்கிங் இன்ஸ்பெக்டர் என்னை விட்டு சென்றனர். இந்த நிகழ்வால் உடலளவில் மட்டுமின்றி கடுமையான மனஉளைச்சலுக்கும் ஆளாகி உள்ளேன். இதுபோன்று சோதனை என்ற பெயரில் பயணிகள் மீது வன்முறை தாக்குதல் நடத்தும் செக்கிங் இன்ஸ்பெக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ:
இந்த புகார் மனுவின் அடிப்படையில் போலீசாரும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.. இதனிடையே, பாதிக்கப்பட்ட நபர் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
ஷாக்கிங்:
அதில்,"நான் எந்த அரசாங்க அதிகாரிகளுக்கும் எதிரானவன் கிடையாது.. அவர்களை முழுமையாக மதிக்கிறேன்.. அவர்கள் நினைத்ததை செய்வது அவர்களின் கடமை.. ஆனால் பொதுமக்கள் மீது கை வைப்பதற்கான அவர்களின் உரிமைகளை விட மேலானது. இது என்னை மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிக்கிறது.. இப்படி பாதிக்கப்படுவேன் என்று நான் கொஞ்சமும் நினைக்கவே இல்லை" வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அத்துடன் 2 வீடியோக்களையும் தினேஷ் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், செக்கிங் இன்ஸ்பெக்டர்கள், அவரை பொதுவெளியில் கடினமாக தாக்குவது பதிவாகி உள்ளது.. சட்டை காலரை பிடித்து இழுத்தும், கழுத்தின் மீது தாக்குவதும், இதனால் தினேஷ் நிலைகுலைந்து போவதும் பதிவாகி இருக்கிறது. இன்னொரு வீடியோவில் தினேஷ் தாக்கப்படுவதை பார்த்து, பஸ்ஸூக்குள்ளிருந்து சக பயணிகள் ஆதங்கத்துடன் கதறுகிறார்கள்..
மனித உரிமை கமிஷன்:
"ஒரு பிள்ளையை போட்டு இத்தனை பேர், இப்படி அடிக்கிறீங்களே" என்று பெண்கள் கதறுவதையும் அந்த வீடியோவில் கேட்க முடிகிறது. இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் கொந்தளித்து உள்ளனர்.. அவர்களில் பலர், தமிழ்நாடு போலீசுக்கு இந்த வீடியோவை டேக் செய்துள்ளனர்.. மேலும் சிலர் மனித உரிமை கமிஷனுக்கும் டேக் செய்து, நியாயம் கேட்டு வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications