சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அதுக்குள்ளயா".. ஏன் இவ்ளோ அவசரம்.. அது பெயிண்ட்டா.. மாணவி தற்கொலையா? நீதிபதிக்கு தடா ரஹீம் கண்டனம்

தடா ரஹீம், கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நீதிமன்ற உத்தரவு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பேயே, கள்ளக்கறிச்சி மாணவி தற்கொலைதான் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது ஏன் என்று இந்திய தேசிய லீக் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

மருத்துவ அறிக்கையின்படி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை என்றும் அவர் தற்கொலைதான் செய்துள்ளார் என்று சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மாணவியின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் ரத்தக் கசிவுகள் மாடியில் இருந்து விழுந்ததால் ஏற்பட்டு இருக்கலாம். மர்ம உறுப்பிலும் காயங்கள் இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலகியது மர்மம்.. கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள் ஏற்பட்டது எப்படி? இதுதான் காரணம்.. ரிப்போர்ட் விலகியது மர்மம்.. கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள் ஏற்பட்டது எப்படி? இதுதான் காரணம்.. ரிப்போர்ட்

 ரத்த மாதிரிகள்

ரத்த மாதிரிகள்

"3வது மாடியில் ரத்த மாதிரிகள் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது, அதை ஆய்வு செய்த தடய அறிவியல் துறை நிபுணர்கள், அது ரத்தம் கிடையது, சிவப்பு நிற பெயின்ட் என்று சொல்லி உள்ளனர், கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்கள், மாணவர்களாலும் பெற்றோராலும் மிரட்டப்படுவது வருந்தத்தக்கது. எனவே, போக்ஸோ சட்டப்பிரிவு 305 மனுதாரர்களுக்கு பொருந்தாது. அதனால் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் என 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படுகிறது" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

 ரத்த மாதிரிகள்

ரத்த மாதிரிகள்

"3வது மாடியில் ரத்த மாதிரிகள் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது, அதை ஆய்வு செய்த தடய அறிவியல் துறை நிபுணர்கள், அது ரத்தம் கிடையது, சிவப்பு நிற பெயின்ட் என்று சொல்லி உள்ளனர், கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்கள், மாணவர்களாலும் பெற்றோராலும் மிரட்டப்படுவது வருந்தத்தக்கது. எனவே, போக்ஸோ சட்டப்பிரிவு 305 மனுதாரர்களுக்கு பொருந்தாது. அதனால் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் என 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படுகிறது" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

 தடா ரஹீம்

தடா ரஹீம்

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பேயே, கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலைதான் என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது ஏன் என்று இந்திய தேசிய லீக் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹூம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்... அத்துடன், பல முக்கிய கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி, "ஏன், ஏன்" என்றுகேட்டு ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

 விசித்திரம்

விசித்திரம்

"மாணவி மரணம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசரின் விசித்திரமான தீர்ப்பை ஜனநாயக முறையில் கண்டனத்தை தெரிவிப்பது ஒவ்வொரு குடிமக்களின் கடமை, அந்த அடிப்படையில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக எமது கண்டனங்கள், கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்புக்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என‌ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிசிஐடி புலன் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது, மாணவி தற்கொலையா கொலையா என்று காவல்துறை இறுதி குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது தான் தெரிய வரும்.

 ஏன் 1

ஏன் 1

மாணவி மரணம் குறித்த ஜிப்மர் குழுவின் ஆய்வு அறிக்கையை மாணவி குடும்பத்தாரிடம் வழங்க முடியாது விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் தெரிவித்தது உயர் நீதிமன்றம் ஜிப்மர் குழுவின் ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கியது மட்டுமின்றி நிரபராதிகள் என்பது போல தீர்ப்பில் கூறியது ஏன்? சிபிசிஐடி தீவிர புலன் விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும்போது மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தால் அப்போது இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பு குற்றவாளிக்கு சாதகமாக அமைந்து விடுமே இதை கவனத்தில் ஏற்றுக்கொள்ளாதது ஏன் ?

 ஏன் 2

ஏன் 2

மாணவி மரணத்திற்கு முன் எழுதியதாக கூறப்படும் கடிதம் உண்மையா பொய்யா என கையெழுத்து பதிவு ஆய்வு காவல்துறையே இன்னும் ஆய்வு செய்யாததற்கு முன்பே அக்கடிதம் எழுதியது தான் என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்தது ஏன்? மாணவி தோழிகள் கொடுத்த வாக்குமூலம் காவல்துறை விசாரணை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையில் இணைப்பதற்கு முன்பே உயர்நீதிமன்றம் இது பற்றி அவசர அவசரமாக ஜாமீன் மனு மீதான விசாரணையில் கருத்து கூறியது ஏன்?

 ஏன் 3

ஏன் 3

மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஜாமீன் கொடுப்பதும் கொடுக்காமல் மறுப்பதும் உயர்நீதிமன்ற நீதியரசரின் உரிமை.. ஆனால் ஆசிரியர்கள் மாணவிக்கு, நன்றாக படிக்க தான் ஆலோசனை கூறினார்கள், மாணவி தற்கொலை செய்து கொண்டது வருத்தமாக உள்ளது என்று ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ் நீதிமன்றம் வழங்கியது ஏன்? குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கியதைவிட குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐந்து பேரும் நிரபராதிகள் என்பதுபோல உயர் நீதிமன்ற நீதியரசரின் தீர்ப்பு உள்ளதை எமது கண்டனங்களை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Did the High court pass the order quickly and Muslim League condemns Kallakkurichi Students death case தடா ரஹீம், கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நீதிமன்ற உத்தரவு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X