"அண்ணன் எடப்பாடி" கிட்ட ஒன்னே ஒன்னு கேக்கணும்.. திருமாவளவன் சொன்னதுமே, சட்டுனு திரும்பி பார்த்த பாஜக
விசிக திருமாவளவன், அதிமுகவுக்கு முக்கிய அட்வைஸ் ஒன்றை மீண்டும் தந்துள்ளார்
சென்னை: அதிமுக குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசிய பேச்சு, தமிழக அரசியல் களத்தில் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.. இதை விசிக மட்டுமல்லாமல், அதிமுக தொண்டர்களே ஷேர் செய்தும் வருகிறார்கள்.
வரும் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. ஒருவேளை பாமக, திமுக கூட்டணியில் இடம்பெற நேர்ந்தால், நிச்சயம் விசிக அங்கு தொடர முடியாது..
அப்படி தொடர முடியாத பட்சத்தில், நிச்சயம் அதிமுகவுடன் விசிக கூட்டணியை வைத்து கொள்ளும் என்றும் சலசலப்புகள் எழுந்தன.. ஆனால், திமுக கூட்டணியில்தான் விசிக பயணிக்கும் என்பதை பலமுறை அழுத்தம் திருத்தமாக திருமாவளவனே அறிவித்து விட்டார்.

திருமாவளவன்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சனாதனமா? சனநாயகமா? என்கிற கோட்பாட்டை முன்வைத்துதான் மாநாடு, பொதுக்கூட்டங்களை நடத்தி திமுக கூட்டணியை பலப்படுத்தினார் திருமாவளவன்.. மேலும் தானே முன்னின்று, ஓடிஓடிச்சென்று ஒவ்வொரு கட்சியாக பேசி ஆதரவையும் திரட்டினார்.. சமீபத்தில்கூட நெய்வேலி கூட்டத்தில் பேசிய திருமாவளவனின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

மகா கொம்பன்
குறிப்பாக, "திமுக - விசிக கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைத்துவிட முடியாது.. சிதைத்துவிட முடியாது.. ஏனென்றால், நாங்கள் கொள்கை சார்ந்து ஒன்றிணைந்த கூட்டணியாக இருக்கிறோம்.. தனிப்பட்ட பாஜகவுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. அது பேசும் அரசியலை எதிர்க்கிறோம்.. அதன் கொள்கையை எதிர்க்கிறோம்.. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகத்துக்கே எதிரி என்று எங்களை திசைதிருப்புகிறார்கள்.. பாமகவின் அணுகுமுறைகளை நாங்கள் விமர்சிக்கிறோம்.. அதற்காக நாங்கள் ஒட்டுமொத்த வன்னியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை" என்று தெளிவுபடுத்தியிருந்தார் திருமாவளவன்.

கருணாநிதி
அதேசமயம், அதிமுகவுக்கும் அவ்வப்போது நல்ல விஷயங்களையும், அறிவுரைகளையும் சொல்லியபடியே இருக்கிறார்.. அதிமுகவுக்கும், அக்கட்சி தொண்டர்களுக்கும் திருமாவளவன் அக்கறையுடன் பல ட்வீட்களை பதிவிட்டு அட்வைஸ் செய்தும் வருகிறார்.. பாஜகவிடம் கவனமாக இருக்கும்படியும் அதிமுக தரப்பை எச்சரித்தும் வருகிறார்.. இந்நிலையில், ஒரு பிரபல சேனலுக்கு திருமாவளவன் ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியிலும் அதிமுகவின் நலன் பற்றியே பிரதானமாக எடுத்துரைத்துள்ளார்.

கலைஞர்
அதன் சுருக்கம்தான் இது: "தமிழ்நாட்டில் கலைஞருக்கு எதிராக அன்று எம்ஜிஆர் இருந்தார்.. அடுத்து ஜெயலலிதா அம்மா இருந்தாங்க.. இப்படி இரு துருவ அரசியல் இங்கே நடந்தது.. இப்படி சொல்வதைவிட, திமுகவுக்கு எதிராக அதிமுக இருந்தது என்று சொல்வதே சரி.. திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளால், காங்கிரசும் பாஜகவும் இங்கே வளர முடியாமல் போனது.. ஒருவேளை அதிமுக என்ற கட்சி உருவாகாமல் இருந்திருந்தால், காங்கிரஸ் Vs திமுக என்றே இங்கே நீண்ட கால அரசியல் நடந்திருக்கும்.

எடப்பாடி பழனிசாமி
தேசிய கட்சியாக காங்கிரஸ் இருப்பதால்தான், இன்னொரு தேசிய கட்சியான பாஜக வளர முடிந்தது.. 2 மாநில கட்சிகள் வலுவாக இருக்கும் இடத்தில், 2 தேசிய கட்சிகள் வர முடியாது... அண்ணன் எடப்பாடி பழனிசாமியை நான் நேரில் சந்தித்தால், அதிமுகவை வலிமைப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வியை கண்டிப்பாக நான் அவரிடம் கேட்பேன்.. ஜெயலலிதா எம்ஜிஆர்மாதிரி அக்கட்சியை ஒருவர் வழிநடத்தவேண்டும்.. நானே ஒரு அரசியல் கட்சி நடத்துவதால், இன்னொரு கட்சி நலன் பற்றி பேசக்கூடாது..

அண்ணன் எடப்பாடி
அதிமுக சிதறினால், அதனால் தங்களுக்கு நன்மை என்றே யாராக இருந்தாலும் நினைப்பார்கள்... அதிமுக பலவீனமாக வேண்டும், அதிமுக தொண்டர்கள் சிதறிபோய், தங்கள் கட்சியில் வந்து சேர வேண்டும், அதிமுக அழிந்து போக வேண்டும் என்றெல்லாம் பிற கட்சியினர் நினைப்பார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.. காரணம், அதிமுக இடத்தில் பாஜக வந்து உட்கார்ந்து கைப்பற்ற நினைக்கிறது. அங்கே பாஜக வரக்கூடாது என்றால், அதிமுக வலுவாக இருக்க வேண்டும் " என்று அக்கறையும், உரிமையும் கலந்த வேண்டுகோளை மீண்டும் அதிமுகவுக்கு விடுத்துள்ளார் தொல். திருமாவளவன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications