• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மீனாவை காதலித்தீர்களா".. படாரென கேட்ட கேள்வி.. ஸ்டன்னிங் பதில் சொன்ன திருமாவளவன்.. என்னன்னு பாருங்க

நடிகை மீனாவை திருமாவளவன் காதலித்தாரா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
Google Oneindia Tamil News

சென்னை: நடிகை மீனாவை காதலித்தீர்களாக என்று, விசிக தலைவர் திருமாவளவனிடம், டிவி சேனல் ஒன்று கேள்வி எழுப்பும் புரமோ இணையத்தில் பரபரப்பை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறது.

Recommended Video

  Stalin தேசிய தலைவராக வேண்டிய நேரம் வந்துவிட்டது - Thol. Thirumavalavan *Politics

  விசிக என்ற இயக்கம், இன்று அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒரு கட்சியாக விஸ்வரூபமெடுத்துள்ளது என்றால், அதற்கு "உள்ளடக்கிய அரசியலை", கையில் எடுத்த திருமாவளவன் மட்டுமே காரணம் என்பதை உரக்க சொல்லலாம்.

  ஒதுக்கப்பட்டு கிடக்குடம் ஏராளமான சேரிகள், தலைநிமிர்வதே தன்னுடைய ஒரே லட்சியம் என்று உறுதியுடன் அன்று அரசியல் பயணத்தை கால்நூற்றாண்டுக்கு முன்பேயே துவக்கியவர் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.

  ‛அண்ணன்’ என வாழ்த்திய அண்ணாமலை.. ‛சகோதரர்’ என நன்றி கூறிய திருமாவளவன்! டுவிட்டரில் நெகிழ்ச்சி! ‛அண்ணன்’ என வாழ்த்திய அண்ணாமலை.. ‛சகோதரர்’ என நன்றி கூறிய திருமாவளவன்! டுவிட்டரில் நெகிழ்ச்சி!

   பவர்புல் திருமா

  பவர்புல் திருமா

  இன்று தமிழகத்தில் தவிர்க்கவே முடியாத சக்தியாக விளங்கி கொண்டிருக்கிறார்.. சாதாரண ஏழை தலித் குடும்பத்தில் பிறந்து, லட்சக்கணக்கான விசிக தொண்டர்களின் ஒப்பற்ற தலைவராகவும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் தனிப்பெரும் இயக்கத்தை உருவாக்கி, வெற்றிகரமான அரசியல் தலைவராகவும் இன்று வலம் வருகிறார் திருமாவளவன்.. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கி வருகிறார்...

   திருமாவளவன்

  திருமாவளவன்

  தலித் மக்களின் விடுதலைக்காகவும், தலித் மக்கள் அரசியலில் எழுச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், தமிழர்கள் தலை நிமிர வேண்டும் என்பதற்காகவும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் திருமாவளவன்.. அதற்காக இதுவரையிலும் திருமணமே செய்து கொள்ளாமலும் இருந்து வருகிறார். அந்த வகையில் அவரது 60வது பிறந்த நாள் மணிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17 அன்று 60வது பிறந்த தினத்தை அவர் கொண்டாடினார்..

  கலைஞர்

  கலைஞர்

  இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திருமாவளவனை வாழ்த்தினார்.. அப்போது, "என் அப்பா, தலைவர் சொல்லிக் கூட திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளவில்லை,.. கலைஞர் சொல்லி அவர் கேட்காத ஒன்று உண்டு என்றால் அது அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதுதான்.. ஒருவேளை 30 ஆண்டுகளுக்கு முன்பாக நான் அவருடன் நண்பராக பழகி இருந்தால், நானே ஒரு பெண்ணைப் பார்த்து திருமாவளவனுக்கு கல்யாணம் செய்து வைத்து இருப்பேன், அது முடியாமல் போய்விட்டது.. மொத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் என்ற கட்சியையே அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார், சிறுத்தை குட்டிகள்தான் அவரின் பிள்ளைகள் " என்று கூறியிருந்தார்.

   நடிகை மீனா

  நடிகை மீனா

  இந்நிலையில், சத்தியம் டிவியில் திருமாவளவனிடம் நேர்க்காணல் நடத்தப்பட்டுள்ளது.. அப்போது பல்வேறு கேள்விகள் திருமாவளவனிடம் கேட்கப்பட்டுள்ளது.. அதன் புரோமோவும் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.. அந்த புரோமோவில், நெறியாளர் திருமாவளவனிடம், "நீங்கள் நடிகை மீனாவை விரும்பியதாக சொல்கிறார்களே?" என்று கேள்வி கேட்கிறார்.. அதற்கு திருமாவளவன், அவர் நடித்த ஒரே ஒரு படத்தைதான் பார்த்திருக்கிறேன், ஏதோ தஞ்சாவூரு மண்ணெடுத்து என்று ஒரு பாட்டு வருமே.. அந்தப் படம்தான் என்று பதிலளிக்கிறார்.

   அம்மாவின் வலி

  அம்மாவின் வலி

  பெண் பார்க்க சென்றிருக்கிறீர்களா என்று நெறியாளர் கேட்க, அது என் வாழ்க்கையில் நடந்ததே இல்லை என்கிறார் திருமாவளவன்.. எல்லா விஷயத்திலும் பொதுநலவாதியாக இருந்தாலும், இந்த கல்யாண விஷயத்தில் மட்டும் ஏன் சுயநலவாதியாக இருக்கிறீர்கள்? ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள்? 60 வயது ஆகிவிட்டது, இனியாவது முடிவு எடுங்கள் இல்லை என்றால் நீங்களே நினைத்தாலும் முடியாது" என்று நெறியாளர் சொல்கிறார்.. அதற்கு திருமாவளவன் அம்மாவின் வலி என்ன என்பது இப்போது எனக்கு புரிய தொடங்கியுள்ளது. அந்த வலியை நான் உணர ஆரம்பித்துள்ளேன் என்கிறார்.

   ஜெயலலிதா

  ஜெயலலிதா

  "ஜெயலலிதாவை பாருங்க.. அவருக்கு ஒரு வாரிசு இருந்திருந்தால் அவரை எப்படி கவனித்திருப்பார்கள்.. நீங்கள் ஏன் உங்களை கவனித்துக்கொள்ள ஒரு பெண்ணை வைத்துக் கொள்ளக்கூடாது? நெறியாளர் கேள்வி எழுப்ப, அதற்கு அவர், பார்ப்போம் சூழல் எப்படி போகிறது என்று பார்ப்போம் ன்று திருமாவளவன் பதில் சொல்கிறார்.. இப்படி அந்த புரமோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

   நெருக்கம் + இணக்கம்

  நெருக்கம் + இணக்கம்

  பொதுவாக, தலைவர்கள் தங்கள் தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பேச மாட்டார்கள்.. பிறரையும் அவ்வாறு பேச அனுமதி தர மாட்டார்கள்.. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதும் நாகரீகமானதாக இருக்காது.. ஆனால், திருமாவளவனிடம் அப்படி இல்லை.. யாராலும் எளிதில் நெருங்கக்கூடிய தலைவராக, எந்தவிதமான கேள்வி என்றாலும், அதற்கு முகம் கோணாமல் பதிலளிக்கும் தலைவராக விளங்குகிறார் என்பதற்கு இந்த புரமோ ஒரு உதாரணம்..

  எண்ணத்திண்ணம்

  எண்ணத்திண்ணம்

  அதுமட்டுமல்லாமல், ஒருவரின் வாழ்க்கையில் நுழையும் அத்துமீறலாக இந்த விஷயத்தை அணுக முடியாது.. திருமாவளவன் மீதான அக்கறையும், அன்பும், பாசமும், தான் திருமண பேச்சை எடுக்க அடித்தளமாக விளங்குகிறது.. இந்த அன்புதான் ஸ்டாலினிடம் தென்பட்டுள்ளது.. இந்த பாசம்தான் நெறியாளரிடமும் தென்பட்டுள்ளது.. இந்த அக்கறைதான், ஒட்டுமொத்த தமிழக மக்களிடன் எண்ணத்திண்ணமாகவும் உள்ளது..!

  English summary
  Did Thirumavalavan love Actress Meena and Do you know what the answer was நடிகை மீனாவை திருமாவளவன் காதலித்தாரா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X