"நெல்லிக்கனி" சிதறுது.. இந்தியா கூட்டணி உடையுது? 4 பக்கமும் திமுகவுக்கு "செக்"? சீறிவந்த திருமாவளவன்
சென்னை: விரைவில் இந்தியா கூட்டணி உடைந்துவிடும் என்று திமுகவுக்கு எதிரான கட்சிகள் கருத்துக்களை முன்வைத்து விமர்சிக்க துவங்கியிருக்கின்றன.
2 நாட்களுக்கு முன்பு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், இந்திய கூட்டணியைப் பொறுத்தவரை ஒன்றுக்கொன்று முரணான நபர்கள் கூட்டணி அமைக்கும்போது, தவளையும், எலியும் சேர்ந்து கூட்டணி அமைத்தது போன்றது.

ஏற்கனவே மம்தா பானர்ஜி வெளியேறிவிட்டார்.. அதன் பிறகு, கெஜ்ரிவால், நிதீஷ் குமார் உள்ளிட்டோர்கள் வெளியேறினார்கள்... சேலம் மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்திய கூட்டணி வெற்றிபெறும் என்று கூறியிருந்தார். அவர் அப்படி பேசிவிட்டு, வீட்டுக்கு போவதற்குள் அந்த கூட்டணியே சுக்குநூறாக உடைந்து வருகிறது. கடைசியில், I.N.D.I.A கூட்டணியில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே மிஞ்சுவார்" என்று கூறியிருந்தார்.
ஜெயக்குமார்: இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இதையேதான் சொல்லி உள்ளார்.. வட இந்தியாவில் நெல்லிக்காய் மூட்டைபோல இண்டியா கூட்டணி சிதறிகொண்டிருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், "மக்களவை தேர்தல் தொடர்பாக 3 தேர்தல் குழுக்கள் ஆலோசனை நடத்தியுள்ளன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மக்களின் கருத்தை கேட்க உள்ளது. அதனடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.
நெருக்கம்: பாஜகவுடன் எங்களுக்கு எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் சரி, எங்களுடைய பதில் இதுதான். அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன என்பது குறித்து தேர்தல் நெருக்கத்தில் தெரியவரும்.
மத்தியில் 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பாஜக, தமிழக நலனை புறக்கணித்தது குறித்தும், 17 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்து, தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல், தங்கள் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்ட திமுக குறித்தும் தேர்தலில் மக்கள் மத்தியில் தெரிவிப்போம். மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தபோது, ஆளுநர் பதவி தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக, அனைத்து மாநிலங்களிலும் அந்த பதவியை நீக்க இப்போது குரல் கொடுத்து வருகிறது.
2 கம்யூனிஸ்ட்கள்: தமிழகத்தில், திமுக கூட்டணியில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே கொள்கை உடையவர்கள் கிடையாது.. காங்கிரஸை கம்யூனிஸ்ட் ஏற்காது... 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையிலும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. வட இந்தியாவில் நெல்லிக்காய் மூட்டைபோல இண்டியா கூட்டணி சிதறி வருகிறது... தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால், தமிழகத்திலும் அதுபோல நடக்கும்" என்றார். எனினும், இந்தியா கூட்டணி மிகுந்த வெற்றியை பெறும் என்று திமுகவின் கூட்டணி கட்சிகள் அழுத்தமாக கூறி வருகின்றன..
விசிக தலைவர் திருமாவளவன் சொல்லும்போது, "இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது நிதிஷ்குமாருக்குதான் நஷ்டமாக அமையும். அவர் சில வருடங்கள் முதல்வராக தொடர்வதற்காக, ஒரு மாபெரும் வரலாற்று பிழையை செய்துள்ளார்.. ஆனால், தேர்தலுக்கு பிறகு, நிதிஷ்குமார் ரொம்ப வருத்தப்படுவார்.. நிதிஷ்குமார் இல்லாவிட்டாலும் கூட, இந்தியா கூட்டணி தேர்தலை கம்பீரமாக சந்திக்கும் சனாதன சக்திகளை வீழ்த்தும்.
பாஜக: இந்தியா கூட்டணியை விட்டு வெளியே வருவோம் என்று மம்தாவும் சொல்லவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலும் சொல்லவில்லை. தேர்தலையே எதிர்கொள்ளாமல் நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றாக அழித்தொழிக்க பாஜகவினர் துடிக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு பெரிய கனவு திட்டம் உள்ளது. மறுபடியும் அந்த கனவு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அளவில்தான் ஒரு பாசிச காட்டாட்சியை நடத்த வாய்ப்புள்ளது. அந்த அச்சுறுத்தலில் இருந்துதான் இந்தியா கூட்டணி உருவாகியிருக்கிறது" என்கிறார் திருமாவளவன். பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications