சீமான் பேச்சை விஜய் காப்பி அடித்தாரா? சோசியலில் வைரலாகும் Copy Cat Vijay! தவெக நாம் தமிழர் மோதல்
சென்னை: ஈரோடு பொதுக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சை காப்பியடித்ததாக தம்பிக்கள் இணையதளத்தில் விவாதித்து வருகிறார்கள்.
ஈரோட்டில் தவெக பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

அத்துடன் திமுகவை தீயசக்தி என விமர்சித்த அவர் தவெக தூயசக்தி என்றார். அது போல் தன்னை விமர்சித்து வரும் சீமானையும் விஜய் விட்டு வைக்காமல் விமர்சித்தார். விஜய் பேசுகையில், "எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டுதான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். ஆகையால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் 2026 தேர்தலில், களத்தில் இருப்பவர்களைதான் எதிர்ப்போம்.
களத்தில் இல்லாதவர்களையும், களத்துக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களை எதிர்க்கும் எந்த ஐடியாவும் இல்லை. நீங்க கேட்குறத்துக்காக எதிர்த்துட்டு இருக்க முடியாது" என்று விஜய் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் மறைமுகமாக சீமானுக்குத்தான் என்கிறார்கள்.
மேலும் இலவசங்கள் குறித்து விஜய், "சலுகைகளுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் திமுகவினர் மக்களை ஓசி ஓசி என அவமரியாதை செய்கிறார்கள். இது என்ன மாதிரியான மனநிலை. மக்கள் காசில் மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என்று சொல்வீர்கள்? என ஆவேசமாக விஜய் பேசினார்.
இந்த நிலையில்தான் சீமானின் பேச்சை விஜய் அப்படியே காப்பியடித்து பேசியதாக நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். முன்பு ஒரு பேட்டியில் சீமான் பேசுகையில், "மக்களை காசை எடுத்து மக்களுக்கு திருப்பி கொடுப்பதை எப்படி இலவசம் என சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
சீமானின் இந்த பேச்சைத்தான் விஜய் காப்பி அடித்து பேசியதாக சீமானின் வீடியோவை போட்டு சமூகவலைதளங்களில் தம்பிக்கள் வைரலாக்கி வருகிறார்கள். ஒரு வார்த்தை கூட சொந்தமாக பேச தெரியவில்லை. எந்தவொரு தலைவர்களின் வரலாறும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் தமிழகத்தை இவர் ஆள போகிறாராம் என நாம் தமிழர் கட்சியினர் கிண்டல் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தவெகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
அதில் "ஒரு ஆண்டுக்கு ரூ 500 கோடி வருமானத்தை விட்டுவிட்டு மக்களுக்காக விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். திமுக அரசின் தவறுகளை தைரியத்துடன் எதிர்த்து கேட்கிறார். அவர் பின்னால் மக்கள் சக்தி அணிவகுத்து நிற்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசி திமுகவிடம் சரணடைய விஜய் ஒன்றும் சீமான் இல்லை என்று தவெகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை. ஆரம்பத்தில் தம்பி தம்பி என சீமான் கூறினாலும் தற்போது விஜய்யை அவர் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார்.
இதையடுத்து சமூகவலைதள பக்கத்தில் நாம் தமிழர் கட்சியினரும் தவெகவினரும் மோதி கொள்கிறார்கள். அது போல் அரை மணி நேரத்திற்கும் மேல் பேசிய விஜய் நுனி புல் மேய்வது போல் பேசினார் என்றும் அவரது பேச்சில் முழுமை இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications