பிரிட்ஜும் வேண்டாம்! ரூ 8000 கூப்பனும் தேவையில்லை! தவெக முன்னிலைக்கு இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதுதான் தவெகவை முன்னிலைக்கு கொண்டு சென்றது என்கிறார்கள்.

tvk vijay

2026 தவெக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளின் விவரம்:

60 வயதிற்கு குறைவாக உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்

அன்னபூரணி சூப்பா் சிக்ஸ் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டா் இலவசமாக வழங்கப்படும்

அரசு பள்ளி மாணவா்களின் இடைநிற்றலை தடுக்க ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களின் தாய்மாா்களுக்கு ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.15,000 வழங்கப்படும்

ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும்

தமிழ்நாடு முழுவதும் 100 காமராஜர் பள்ளிகள் அமைக்கப்படும்

இளங்கலை முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் உலகத்தர அளவிலான சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.25 லட்சம் இன்சூரன்ஸ்

அரசு போக்குவரத்துக்கழக அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்

அனைத்து நலத்திட்டங்களையும் எளிதாக பெற ஒவ்வொரு
குடும்பத்திற்கும் TamilNadu Citizen privilege card திட்டம்

Citizen privilege card மூலம் அரசின் அனைத்து நலத்திட்ட உதவியும் லஞ்சமில்லாமல் நேரடியாக மக்களை சென்றடையும்

அனைத்து அரசு சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் Vetri TN Super App உருவாக்கப்படும்

பட்டம் முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாாிகளுக்கு வேலையில்லா கால நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும்

டிப்ளமோ முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாாிகளுக்கு வேலையில்லா கால நிவாரணமாக ரூ.2,500 வழங்கப்படும்

தமிழ்நாட்டில் உள்ள தனியாா், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழா்களுக்கு 75% வேலை தரும் வகையில் சட்டம் இயற்றப்படும்.

கல்வி நிறுவனங்களை சுற்றி போதைப்பொருள் தடுப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும்

ரூ.18,000 ஊதியத்தில் 5 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்

5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்

5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு விவசாய கடன் 50% தள்ளுபடி செய்யப்படும்

பயிா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் பயிா் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

அனைத்து மீனவா்களுக்கும் வீடு கட்டித்தரும் லட்சிய வீடு திட்டம் செயல்படுத்தப்படும்

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்

அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்

அங்கன்வாடி ஊழியா்களின் மாத ஊதியம் ரூ.18,000 ஆக உயா்த்தப்படும்

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியா்கள், ஆசிாியா்கள் பணி நிரந்தம் செய்யப்படுவா்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்யேகமான ஒரு மாஸ்டா் பிளான்: AI பல்கலை, AI நகரங்கள் உருவாக்கப்படும்

சாதி சான்றிதழ் உள்ளிட்ட எந்த ஆவணமாக இருந்தாலும் 21 நாளில் கிடைக்க வழிவகை செய்யப்படும்

இவ்வாறு தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மக்கள் இலவச பிரிட்ஜ், ரூ 8000 கூப்பன் திட்டங்களை காட்டிலும் வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+