கவனிச்சீங்களா? விடுதலை 2 படத்தில் வரும் வசனங்கள்.. விஜய் தவெக மீது அட்டாக்? கொதிக்கும் தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலை 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில்.. நடிகர் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பில் இந்த படம் வெளியாக உள்ளது.

விடுதலை 1 படத்தின் தொடர்ச்சியாக விடுதலை 2 படம் வெளியாகிறது. இந்த படத்தின் ஆடியோ நிகழ்ச்சியில் நேற்று டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சனம் செய்வது போல இருப்பதாக விவாதங்கள் எழுந்துள்ளன.

vijay tamilaga vetri kazhagam

"தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது" என்ற வசனம் விஜயின் அரசியல் கொள்கையை விமர்சனம் செய்யும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

"என்ன மாதிரி ஒருத்தன் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்ததால் தான் உன்னை மாதிரி ஒருத்தன் இன்னைக்கு இங்க உட்கார்ந்திருக்க" அதேபோல் திமுகவின் முன்னாள் முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து இந்த வசனம் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கருத்துக்கள் வைக்கப்படுகின்றன.

மீட்டிங்: நடிகர் விஜயின் தமிழா வெற்றிக் கழக மீட்டிங்கில், திருவள்ளுவர், அம்பேத்கார், பெரியார், காமராஜர், வேலுநாசத்தியார், அஞ்சலை அம்மாள் உட்பட 6 பேர் அரசியல் வழிகாட்டிகள் என்று நடிகர் விஜய் அறிவித்து இருந்தார்.இ ந்த ஐந்து தலைவர்களின் கொள்கை அடிப்படையில் கட்சி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகார்பூர்வ கொள்கையாக மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை அறிவிக்கப்பட்டு உள்ளது என்று விஜய் அறிவித்து இருந்தார்.

ஆனால் விஜயின் இந்த அறிவிப்பு.. பல விவாதங்களை ஏற்படுத்தியது. மதசார்பற்ற கொள்கை என்று கூறிவிட்டு மூன்று மத புத்தகங்களை மேடையில் கொடுக்கிறார். ஜாதிக்கு எதிர் என்று கூறிவிட்டு அதை பற்றிய கருத்துக்களை கொண்ட பகவத் கீதையை மேடையில் கொடுக்கிறார், கடவுள் மறுப்பு செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டு பெரியார் ஆதரவு என்கிறார்.

பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்றவுடன் ஒரு கும்பல் பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்து கிளம்பி இருப்பார்கள். பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று சொன்னதும்.. ஒரு கட்சி.. ஒரு குரூப் எங்களை எதிர்த்தது, என்று பேசுகிறார் என்றெல்லாம் விஜய் கூறிய கருத்துக்கள், கொள்கைகள் கடுமையான விவாதத்திற்கு உள்ளானது.

அதோடு முற்போக்கு அரசியல் பேசும் விஜய், யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள், என்று நடிகர் விஜய் பேசி இருக்கிறார். பாசிசத்தை பாயசத்துடன் சாப்பிட்டது விமர்சனங்களுக்கு உள்ளானது.

கொள்கை விமர்சனம்: இப்படி விஜயின் கொள்கையில் பல கேள்விகள் இருக்கும் நிலையில்.. விடுதலை 2 படம் விஜயை விமர்சனம் செய்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. "தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது" என்ற வசனம் விஜயின் அரசியல் கொள்கையை விமர்சனம் செய்யும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

விஜயின் ரசிகர்கள்.. அக்கட்சி தொண்டர்கள் இப்போதே இந்த படத்தை இணையத்தில் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+