நோட்டு திமுகவிடம்.. சீட்டு தவெகவிடம்! ’அய்யா’ ராமதாஸின் ப்ளானை மோப்பம் பிடித்த விஜய்! இதான் மேட்டரா?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியை கைப்பற்றிய மகன் அன்புமணி, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி சேர நினைத்தார் ராமதாஸ். ஆனால் திருமாவளவனுக்காக ராமதாஸை திமுக கை கழுவி விட்டது. இதை அடுத்து தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறிய நிலையில் அதனை தமிழக வெற்றி கழகம் மறுத்துள்ளது. இந்த நிலையில் திமுகவிடம் தேர்தல் செலவுக்கு பணம் பெற்றுக் கொண்டு தவெகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் தரப்பு திட்டமிடுவதாக கிடைத்த தகவலால் தான் விஜய் கூட்டணி பேச்சு வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக சொல்கின்றனர்.
தமிழக அரசியல் வட்டாரங்களில் சமீப நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் அரசியல் நகர்வுகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கட்சியின் நிறுவனர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் தனித்தனி அரசியல் பாதையில் உள்ளனர்.
இதனால், பாமக தற்போது இரு பிரிவுகளாக செயல்படும் நிலை உருவான பிறகு, கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் மற்றும் அமைப்புகள் அன்புமணி ராமதாஸ் பக்கம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ராமதாஸ் அரசியல் திட்டம்
இதனால் அன்புமணி ராமதாஸ், வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார். இதற்கு மாறாக, அரசியலில் தனிமைப்படும் சூழலை சந்தித்த ராமதாஸ், திமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகளைத் தேடியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், திமுக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காரணமாக, ராமதாஸை கூட்டணியில் சேர்ப்பதில் திமுக தலைமை தயக்கம் காட்டியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தவெக
இதன் பின்னர், ராமதாஸ் தரப்பு மாற்று வாய்ப்புகளை ஆராயத் தொடங்கியது. அந்த வரிசையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் யோசனை ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது. இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு உள்ள செல்வாக்கு, குறிப்பாக பெண்களிடையே காணப்படும் ஆதரவு, வட மாவட்டங்களில் பாமக வைத்துள்ள பாரம்பரிய வாக்குவங்கி ஆகியவை இணைந்தால் அரசியல் பலன் கிடைக்கும் என ராமதாஸ் தரப்பில் கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
இதன் மூலம், அன்புமணி ராமதாஸையும், திமுக கூட்டணியில் முக்கிய தடையாக இருக்கும் திருமாவளவனையும் ஒரே நேரத்தில் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியும் என்பதே அந்தத் திட்டத்தின் அடிப்படை என சொல்லப்படுகிறது. இதை அடுத்து ராமதாஸ் ஆதரவாளர்களான ஜிகே மணி, அருள் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை உறுதி செய்தனர். இந்நிலையில் தான் எந்த கட்சி உடனும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என தமிழக வெற்றிக்கழகம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
ராமதாஸ் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் திமுக ராமதாஸ் தொடர்பு காரணமாகவே விஜய் பேச்சு வார்த்தைக்கு முதல் சுற்றிலேயே முற்றுப்புள்ளி வைத்ததாக சொல்கின்றனர். ராமதாஸை சேர்த்துக் கொள்ள திமுக தலைமை விரும்பினாலும் திருமாவளவனால் அந்தத் திட்டத்தை செயல்படுத்தவில்லை. அதே நேரத்தில் ராமதாஸை விட்டுவிட மனதில்லாமல் பொருளாதார ரீதியாக ராமராஸுக்கு உதவ திமுக முன் வந்ததாக சொல்லப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்துடன் சேர்ந்தால் அதிமுகவுக்கு வாக்குகள் சிதறும் எனக் கணித்த திமுக, ராமதாஸுக்கு தேர்தல் செலவுக்கு குறிப்பிட்ட தொகையை தருவதாக பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.
திமுகவிடம் பணம்
இந்த நிலையில் திமுகவுடன் நெருக்கமாக இருந்த ஜிகே மணி தவெக பக்கம் பேச்சுவார்த்தைக்குச் சென்று நிலையில் இந்த தகவல் விஜய் காதுகளுக்கு வியூக நிபுணர் ஒருவர் மூலம் சென்றதாக சொல்லப்படுகிறது. திமுகவை எதிர்ப்பதை பிரதான இலக்காகக் கொண்டிருக்கும் விஜய் இந்த தகவலை கேட்டதும் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என சொன்னதாகவும். இதனைத் தொடர்ந்துதான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளராக ராஜ்மோகன் எந்த கட்சியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என முற்றுப்புள்ளி வைத்தார் என்கின்றனர்.
-
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா?












Click it and Unblock the Notifications