Robo Shankar wife: ரோபா சங்கரின் மனைவி பிரியங்காவும் நடிகைதான் தெரியுமா? கணவருக்கு முன்பே சினிமாவில் எண்ட்ரி
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மனைவி (Robo Shankar wife) பிரியங்காவும் சினிமாவில் நடித்துள்ளார். நடிகை, model மற்றும் டான்சர் என பன்முகத்திறன் கொண்ட இவர், குக் வித் கோமாளி சீசன் 1ல் பங்கேற்றுள்ளார். ரோபோ சங்கருக்கு முன்பாகவே பிரியங்கா திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இன்று 19ஆம் தேதி அவரது உடல் சென்னையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. மாலை 4 மணியளவில் அவரது உடல் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

இன்னும் மீதி வருடத்தை
ரோபோ சங்கர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ரோபோ சங்கர் மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும் கணவர் மறைவால் அதிர்ச்சியடைந்துள்ளார். ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர் ஆவார். அண்மையில் இந்த தம்பதி 22-வது திருமண நாளை கொண்டாடியது.
அப்போது தனது கணவர் ரோபோ சங்கர் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில், "29/11/2002 முதல் 29/11/2023 வரை 22 ஆண்டுகள் ஓடிவிட்டது சங்கரம்மா எப்படின்னு தெரியலை. இன்னும் மீதி வருடத்தை இப்படியே உன் கைப்பிடித்து கொண்டே கடந்துவிடனும்னு மட்டும் என் ஆசை. Happy 22nd anniversary my dear sweetheart Sankarammaaaaa" என்று பதிவிட்டு இருந்தார்.
காதலர்கள் தின வாழ்த்துக்கள்
அதேபோல, காதலர் தினத்தன்று வெளியிட்டு இருந்த பதிவில், "இருக்கும் நொடியும் இறக்கும் நொடியும் உன்னோடு இருந்தால் போதும், துடிக்கும் போதும் தவிக்கும் நீ என் அருகில் இருந்தால் போதும் நம் வாழ்க்கை சுகமாகும்.
ஆயிரம் சண்டைகள் உன்னோடு நான் போட்டாலும்... நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லை என்பதே உண்மை. இறக்கும் வரை காதலர்களாகவே இருப்போம் நாம். இனிய காதலர் தின வாழ்த்துக்கள். Happy Valentine's day & I Love You My Sweet wife & Sweetheart Sankaramaaaa...." என்று பதிவிட்டு இருந்தார்.
பிரியங்காவும் சினிமாவில் நடித்துள்ளார்
ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும் சினிமாவில் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் வெளியான கன்னி மடம் படத்தில் நடித்துள்ளார். நடிகை, model மற்றும் டான்சர் என பன்முகத்திறன் கொண்டவர். குக் வித் கோமாளி சீசன் 1ல் அவர் பங்கேற்றுள்ளார். அதுமட்டும் இன்றி கலக்கப் போவது யாரு சீசன் 8ல் பிரியங்காவும் பைனலிஸ்ட்களில் ஒருவராக வந்தார்.
மனைவியை விட்டு கொடுத்ததில்லை
2001 ஆம் ஆண்டு விக்ரம் - லைலா நடிப்பில் வெளியான தில் படத்தில் பிரியங்கா ரோபோ ஷங்கர் நடித்திருப்பார். குல்பி காமெடியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக லைலா உடன் திரையில் தோன்றுவார். இதன் மூலமாக கணவருக்கு முன்பே திரையுலகில் பிரியங்கா கால் பதித்து உள்ளார்.
2002 ஆம் ஆண்டு நடன கலைஞரான பிரியங்காவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அன்றிலிருந்து இன்று வரை தனது மனைவியை எந்த இடத்திலும் ரோபோ சங்கர் விட்டுக் கொடுத்ததில்லயாம்.
நடிகர் ரோபோ சங்கர்
மதுரையைச் சேர்ந்த சங்கர், தனது ரோபோ போன்ற நடன அசைவுகளுக்காக 'ரோபோ' என்ற புனைப்பெயரைப் பெற்றார். 2000களில் பல சிறு வேடங்களில் நடித்த பிறகு, ஸ்டார் விஜயின் பிரபலமான நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சியான 'கலக்கப் போவது யாரு' மூலம் அவருக்கு திருப்புமுனை ஏற்பட்டது.
விஜய், அஜித், விக்ரம் படங்களில்
அவரது நகைச்சுவை உணர்வு மற்றும் தனித்துவமான உடல் மொழி காரணமாக, ரோபோ சங்கர், விஜய் சேதுபதியின் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' மற்றும் 'வாயை மூடி பேசவும்' போன்ற பல பிரபலமான தமிழ் படங்களில் நடித்தார். குறிப்பாக, பிந்தைய படத்தில் அவரது நடிப்பு அவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது.
அவர் 'வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன்', 'கடவுள் இருக்கான் குமாரு', 'சிங்கம் 3', 'விஸ்வாசம்' மற்றும் 'கோப்ரா' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும், தனுஷின் 'மாரி' படத்தில் நடித்தார். விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
மஞ்சள் காமாலைக்கு பிறகு
சில ஆண்டுகளுக்கு முன்பு, மஞ்சள் காமாலைக்கு நீண்டகால சிகிச்சை பெற்று வந்ததால், ரோபோ சங்கர் பொது வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தார். அப்போது அவரது உடல் எடை வெகுவாக குறைந்ததால், பல தமிழ் சினிமா ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து 'ஆர் யூ ஓகே பேபி?', 'சிங்கப்பூர் சலூன்' மற்றும் 'ஜாலி ஓ ஜிம்கானா' போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடித்தார்.
இந்த ஆண்டு வெளியான 'சொட்டா சொட்டா நனையுது' என்ற நகைச்சுவை நாடகத்தில் கடைசியாகத் தோன்றினார். ரோபோ சங்கரின் மறைவுச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோபோ சங்கர் மறைவுக்கு அவரது ரசிகர்களும் திரையுலக நண்பர்களும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications