விஜய் விடலையே.. விருந்து கொடுக்க வந்தவரை நோட் பண்ணீங்களா? ஜெகன் மோகனின் அதே ஸ்டைல்.. பாருங்க
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் இன்று மாநாடு நடத்த நிலம் தந்தவர்களுக்கு விருந்து கொடுத்தார். விக்கிரவாண்டியில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்து தந்தார். இன்று அவரின் உடை செயல்பாடு கவனம் பெற்றது.
நடந்து முடிந்த விக்கிரவாண்டி மாநாட்டில் அரசியல்வாதி போல பேசாமல்.. நடிகர் போலவும் பேசாமல்.. வித்தியாசமான முறையில்.. மேடை நடுக்கம் இன்றி.. சரளமாக விஜய் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது. முக்கியமாக விஜய் திராவிடம், பெரியார், மதவாதம் பற்றியெல்லாம் பேசியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அவரின் பேச்சு எப்படி இருந்ததோ இல்லையோ.. அவரின் பேச்சுக்கு பின் மிகப்பெரிய பயிற்சி இருந்தது என்பது மட்டும் உறுதி.

இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. விஜய் அறிவித்த கொள்கைகள் சரி என்பவர்கள் இருக்கலாம்.. அதை ஏற்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் அவர் பேசிய விஷயங்கள் டிரெண்டானது.. தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆதரித்தோ.. எதிர்த்தோ இந்த மாநாடு பற்றி பலர் பேச அந்த மாநாடு டிரெண்டானது. விஜய் இந்த நிகழ்ச்சியில் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் கவனம் பெற்றன.
விஜய் உடை: விஜயின் பேச்சு.. அவரின் வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் ஆகியவற்றை பார்த்தவர்களுக்கு இது எங்கேயோ பார்த்த ஸ்டைல் போல இருக்கிறதே என்று தோன்றலாம். அது வேறு யாருமல்ல.. ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஸ்டைலைத்தான் விஜய் பின்பற்றுகிறார் என்ற வாதம் வைக்கப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் இன்று மாநாடு நடத்த நிலம் தந்தவர்களுக்கு விருந்து கொடுத்தார். விக்கிரவாண்டியில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்து தந்தார். இன்றும் அவரின் உடை செயல்பாடு கவனம் பெற்றது. இன்று அவர் வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் அணிந்திருந்தது கவனம் பெற்றது.
2009ல் அப்பாவின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது. அதன்பின் அவர் நடத்திய யாத்திரை.. அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. கிரவுண்டு பணிகளை செய்தது.. மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது.. திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அதை செய்ய காரணம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான். அந்த நிறுவனத்தில் அப்போது திட்டங்களை வகுத்தது ஜான் ஆரோக்கியசாமிதான். இப்போது விஜய்க்கு பின்னணியில் இருக்கும் நபரும் ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர்மைண்ட்தான். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.
விஜயின் ஸ்டைல், பேச்சு.. நடை எல்லாம் அப்படியே ஜெகன் மோகன் ஸ்டைலில் இருக்க காரணம்.. ஜான் ஆரோக்கியசாமிதான். ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியசாமி திருச்சிக்காரர்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றமாக பாமகவை அப்போது கொண்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்தார். வடக்கிலும் கூட இவர் தேர்தல் பணிகளை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை செய்த ஜான் ஆரோக்கியசாமி.. தேசியவாத காங்கிரஸ் அங்கே கடந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
தற்போது ஜான் ஆரோக்கியசாமிதான் விஜய்க்கு பின் இருக்கும் அந்த மாஸ்டர்மைண்ட். கட்சி பணிகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்தாலும்.. வியூக வகுப்புகளை கவனிப்பது என்னவோ ஜான் ஆரோக்கியசாமிதான் என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications