ஒரே பேட்டியில் 9 முறை வீசப்பட்ட "சுடு சொற்கள்.." அண்ணாமலை பற்றி சிவி சண்முகம் சொன்ன வார்த்தை லிஸ்ட்!
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக எம்பி சிவி சண்முகம் மிக கடுமையான வார்த்தைகளை சொல்லி திட்டி இருக்கிறார்.
ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. ஜெயலலிதா பெயரை குறிப்பிடாமல்.. முதல்வர்கள் ஊழலுக்காக சிறைக்கு சென்ற ஊர் இது என்று அண்ணாமலை பேசியது அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதற்கு எதிராக மிக கடுமையாக விமர்சனங்களை வைத்துள்ளனர். நேற்று ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் ஆதரவைத் தேடி போயஸ் கார்டன் வாசலில் மோடி, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் வரிசையாக காத்திருந்தனர்; 2014ல் தமிழ்நாட்டில் பாஜகவை ஓட ஓட விரட்டியவர்கள் நாங்கள்! 2024லும் அதே நிலையை ஏற்படுத்த தயங்க மாட்டோம்.

கூட்டணியை மறுபரிசீலனை செய்யவேண்டி வரும். அண்ணாமலை சென்ற ராசி கர்நாடகாவில் பாஜக தோற்றது. தேர்தல் பொறுப்பாளராக கர்நாடகாவுக்கு அண்ணாமலை சென்றார்; இவரது ராசியால் ஒன்னும் இல்லாமல் போய்விட்டது ஊழல் குறித்து பேசும் அண்ணாமலை, கர்நாடகாவில் இருந்த பாஜக அரசின் 40% கமிஷன் ஊழல் குறித்து பேச வேண்டியது தானே? பேசாதது ஏன்?" என்று ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.
சிவி சண்முகம்: இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக எம்பி சிவி சண்முகமும் இன்று மிக கடுமையான வார்த்தைகளை சொல்லி திட்டி இருக்கிறார். ஒருமையிலும், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியும் சிவி சண்முகம் அண்ணாமலையை திட்டி உள்ளார்.
மொத்தம் 9 முறை (ஸ்டார் போடப்பட்டு உள்ளது) கடுமையான வார்த்தைகளை, ஒருமையிலான சொற்பிரயோகங்களை அண்ணாமலைக்கு எதிராக சிவி சண்முகம் பயன்படுத்தி உள்ளார். அவர் தனது பேட்டியில் கூறியதாவது: அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன்.. அதிமுக தேவை இல்லை என்று நீ சொல்லி இருந்தால்.. நீ ஆம்பளை*.. ஆனால் அப்படி சொல்ல முடியவில்லை. எங்களுக்கு பல காலமாக சந்தேகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது என்று சொன்னேன்.
அதை மீண்டும் இப்போது சொல்கிறேன். அண்ணாமலைக்கு மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று ஆசை இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறார். அண்ணாமலை எண்ணமெல்லாம் திமுகவின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான்.
அண்ணாமலை திமுகவின் பி டீமாக, திமுகவின் கொள்கையை பரப்பும் நபராக செயல்படுகிறார். சமீபத்தில் உதயநிதி பேசியதை அண்ணாமலை வழிமொழிந்தார். செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு வந்த போது அந்த தகவலை அவருக்கு சொன்னது யார்?
தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை. அண்ணாமலை என்பவர் தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வைத்துக்கொண்டு செயல்படுகிறார். உனக்குத்தான்* அதிமுக பிடிக்கவில்லையே.. போ*.. உன்னை* யார் இழுத்து பிடித்து வைத்துக்கொண்டு இருக்கிறார்.
ஏன் எங்களை பிடிச்சி தொங்கிக்கொண்டு இருக்கிறாய்*. கட்சியில் பணம் பெற்றுக்கொண்டு பலருக்கு பொறுப்புகளை வழங்கிய தரம்கெட்ட* அண்ணாமலை எங்களின் தலைவர் பற்றி பேசலாமா? அம்மாவை பற்றி பேசலாமா? ஆளுமை மிக்க அவரை பற்றி பேச முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு என்ன யோக்கியதை* இருக்கிறது?
அண்ணாமலைக்கு அரசியல் தெரியவில்லை. பாஜக தலைவர்கள் கைதான போது அண்ணாமலை அரசியலில் இல்லை. அவர் எங்காவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில் மாமூல் வாங்கிக்கொண்டு இருந்திருப்பார். அவர் பிரச்சாரம் செய்த கர்நாடகாவை பாஜக தோல்வி அடைய ஊழல்தானே காரணம்.
நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்றால் போங்க.. யார் உங்களை அழைத்தது. அண்ணாமலைக்கு வீரம் இருந்தால்.. ஆண்மை இருந்தால்*அதிமுக கூட்டணி தொடரும் என்று அமித் ஷா அன்று சொன்ன போது அதை எதிர்த்து இருக்க வேண்டும். அப்போது அண்ணாமலை அதை எதிர்த்து இருந்தால் அவர் ஆம்பளை*. ஆனால் அப்போது பேசவில்லை, என்று கடுமையாக சிவி சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications