நியாபகம் வருதே.. என் மனைவிக்கு 1000 மடங்கு “பவர்”.. ஜெயலலிதாவை அன்றே “டார்கெட்” செய்த அண்ணாமலை
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்ததற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கடந்த மார்ச் மாதமே ஜெயலலிதாவை தனது மனைவியுடன் அண்ணாமலை ஒப்பிட்டு பேசியது நினைவருக்கிறதா?
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாட்டில் ஆட்சி செய்த கட்சிகள் ஊழலில் ஈடுபட்டு உள்ளன. பொதுமக்களுடைய பணத்தை வைத்து முறைகேடு செய்த அனைத்து கட்சிகளையும் நான் சொல்கிறேன். எல்லா கட்சிகளுக்கும் இது பொருந்தும்.

தமிழ்நாட்டில் நடந்தவை அனைத்தும் ஊழல் ஆட்சிதான். ஊழல் செய்ததால் முன்னாள் முதலமைச்சரே தண்டிக்கப்பட்டு இருக்கிறார்." என்று பேசி இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா உள்ளிட்டோர் சிறை தண்டனை அனுபவித்தது தொடர்பாக அண்ணாமலை பேசுவதாக கூறி அதிமுகவினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், "நாவடக்கத்துடன் அண்ணாமலை பேச வேண்டும். சமரச பேச்சு டெல்லியில் நடக்கவில்லை. எங்களின் கண்டன குரல் டெல்லிக்கு கேட்கும். அதிமுக கூட்டணி வேண்டாம் என அண்ணாமலை நினைக்கிறார். கட்டுச் சோறில் உள்ள எலியைபோல் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
அதிமுக கூட்டணியில் வில்லங்கம் செய்ய நினைக்கிறார் அண்ணாமலை. கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்ற சமயத்தில் 40 சதவீதம் கமிஷன் ஊழல் குறித்து அண்ணாமலை ஏன் பேசவில்லை?" என கேள்வி எழுப்பி இருந்தார். இதேபோல் அதிமுகவை சேர்ந்த பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமிர் பேச்சை வன்மையாக கண்டிக்கின்றேன். மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்கள் துரோகிகளால் திட்டமிட்டு பழிவாங்கப் பட்டாரே தவிர, அரசியல் எதிரிகளால் போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கிவர் எங்களுடைய புரட்சித்தலைவி அம்மா அவர்கள். வரலாறு தெரியாமல் உளறுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்." என்று எச்சரித்து உள்ளார்.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதமும் அண்ணாமலை ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் தன்னை ஒப்பிட்டு பேசியதாக அப்போது எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "கலைஞர். ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிடவில்லை.
சில கட்சிகளில் மேனேஜர்கள் உள்ளனர். சில கட்சிகளில் தலைவர்கள் இருக்கிறார்கள். ஜெயலலிதாபோல் முடிவெடுப்பேன் என்றே நான் கூறினேன். என்னை பொருத்தவரை ஜெயலலிதா அம்மையாரைவிட என் தாய் 100 மடங்கு பவர்புல், ஜெயலலிதாவை விட என் மனைவி 1000 மடங்கு பவர்புல்." என்று தெரிவித்து இருந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications