உதயநிதி ஸ்டாலின் தந்த தரமான பரிசு பார்த்தீங்களா? விஜய் கைக்கு வந்த "கருப்பு சிவப்பு"! செம்ம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் புதிய வரலாறு படைத்துள்ள முதலமைச்சர் விஜய், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.. இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலின் வழங்கிய 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' என்ற புத்தகம், வெறும் பரிசாக மட்டுமின்றி ஒரு ஆழமான அரசியல் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.. இரு துருவங்களாகக் கருதப்படும் தலைவர்களின் இந்தச் சந்திப்பும், அதன் பின்னணியில் உள்ள கொள்கை அரசியலும் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கப்போகிறது என்பதை சுருக்கமாக பார்ப்போம்..

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு நிகழ்வாக, முதலமைச்சர் விஜய், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.. இந்த சந்திப்பின் போது மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டிற்கு வருகை தந்த விஜய்யை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாசலுக்கே வந்து கைகொடுத்து வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்..

Udhayanidhi Stalin gift to Vijay

வீட்டிற்குள் சென்ற விஜய்யை மிகுந்த மரியாதையுடன் மு.க.ஸ்டாலின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்து உபசரித்த விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.. சுமார் 10 நிமிடங்கள் வரை நீடித்த இந்த ஆலோசனையின் போது, இரு தலைவர்களும் மிக நெருக்கமாகவும் சுமுகமாகவும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது..

கருப்பு - சிவப்பு சிந்தனை

இந்த சந்திப்பின் இறுதியில் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக, முதலமைச்சர் விஜய்க்கு "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு" என்ற புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கி கவுரவித்தார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இரு துருவங்களாகப் பார்க்கப்பட்ட தலைவர்கள் இப்படி ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரிமாறிக் கொண்டது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்..

"காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு" புத்தகம்

அதுமட்டுமல்ல, முதலமைச்சர் விஜய்க்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு" என்ற புத்தகம் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.. இந்த புத்தகம் வெறும் சாதாரண நூல் கிடையாது, இது திராவிட இயக்கத்தின் வரலாறு மற்றும் அதன் கொள்கை வலிமையை உரக்க சொல்லும் ஒரு ஆவணமாகவே பார்க்கப்படுகிறது.

சுமார் 6 மாசத்துக்கு முன்னாடி நடைபெற்ற திமுக 75வது ஆண்டு "அறிவுத் திருவிழா" கொண்டாட்டத்தின் போது அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலினால் இந்த புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.. திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையையும், அதன் சாதனைகளையும் மிக ஆழமாகப் பதிவு செய்துள்ள இந்த நூலைத் தான், தற்போது விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பரிசாக அளித்துள்ளார்..

ஸ்டாலின் தந்த புத்தகத்தில் என்ன ஸ்பெஷல்

இந்த புத்தகத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று பார்த்தால், இதில் திராவிட இயக்கம் குறித்து பல்வேறு தேசியத் தலைவர்களின் ஆழமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக பாசிச எதிர்ப்பு முகாமில் முன்னணியில் இருக்கும் ஃபரூக் அப்துல்லா, சரத் பவார், பினராயி விஜயன், டி. ராஜா, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற முன்னணித் தலைவர்கள் திராவிடக் கொள்கைகள் குறித்து முன்வைத்திருக்கும் முக்கியமான பார்வைகள் இந்த நூலின் சிறப்பம்சமாகும்.. நாட்டின் முக்கிய அரசியல் ஆளுமைகள் திராவிட மாடல் ஆட்சியை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை இப்புத்தகம் மிக விரிவாக விளக்குகிறது..

75 ஆண்டு சாதனை

முதலமைச்சர் விஜய்க்கு, திராவிடக் கொள்கைகளின் கருவூலமான இந்தப் புத்தகத்தை மு.க.ஸ்டாலின் அவர்கள் பரிசாக வழங்கியிருப்பது ஒரு மிக நுட்பமான அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது.. 2 திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக விஜய் தன்னை முன்னிறுத்தினாலும், தமிழகத்தின் அடிப்படை அரசியல் தளம் என்பது திராவிடக் கொள்கைகளால் ஆனது என்பதை அவருக்கு மறைமுகமாக உணர்த்துவதே இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அதுமட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் 75 ஆண்டுகால சாதனைகளையும், இந்திய அளவிலான பல்வேறு தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்ற ஒரு சித்தாந்தத்தை ஒரு புதிய ஆட்சியாளர் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க "கருப்பு சிவப்பு"கொள்கைகள் எவ்வளவு அவசியம் என்பதை அவருக்கு நினைவுபடுத்தவுமே இந்த திட்டமிட்ட பரிசு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+