நீங்களே முடிவு பண்ணிக்கிட்டீங்களே? தோனி சொன்ன விஷயம்.. தீயாக பரவும் அந்த போட்டோ.. கவனிச்சீங்களா!
சென்னை: 2023 ஐபிஎல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனியை வைத்து மீம் ஒன்று வைரலாகி வருகிறது.
இதற்கு முந்தைய ஐபிஎல் போட்டிகளை விட 2023 ஐபிஎல் போட்டி மிக மிக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. கடந்த சீசன்களில் சில போட்டிகளில் விறுவிறுப்பு இருக்கும்.
அதேபோல் ப்ளே ஆப் செல்வதிலும் கடைசியாக உள்ளே நுழைய போகும் ஒரு அணி எது, இரண்டு அணி எது என்ற கேள்வி இருக்கும். ஆனால் இந்த முறை குஜராத் அணியை தவிர மற்ற எந்த அணி ப்ளே ஆப் செல்லும் என்பது பெரிய கேள்வியாக மாறி உள்ளது.
9 அணிகள் ப்ளே செல்வதற்கான பலத்த போட்டியில் களமிறங்கி உள்ளது. இதெல்லாம் போக டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகள் வேறு பார்மிற்கு திரும்பி உள்ளன. ஹைதராபாத் அணியும் நன்றாக ஆட தொடங்கி உள்ளது.

இதனால் இந்த தொடரே புதிய விறுவிறுப்பை பெற்றுள்ளது. அதோடு எல்லா போட்டிகளும் கடைசி ஓவர் கடைசி பந்து வரை சென்று பல திருப்பங்களுடன் நிறைவு பெறுகிறது. அதனால் இந்த சீசன் இதற்கு முந்தைய சீசன்களை விட சிறப்பாக உள்ளது.
தோனி: இன்னொரு பக்கம் தோனிக்காக இந்த சீசன் இன்னும் கவனம் பெற்றுள்ளது. தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்பதால் அதை பார்க்க லட்சக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கிவிட்டனர்.
தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது உறுதியாகிவிட்டது.
அதனால் ரசிகர்கள் அதிக அளவில் மேட்சை பார்க்க வருகிறார்கள். தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால் அதன்பின் அடுத்த மேட்சிலேயே இதை தோனி மறுத்து இருந்தார். சிஎஸ்கே கேப்டன் தோனி.. உங்கள் கடைசி சீசனில் உங்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பை எப்படி பார்க்கிறீர்கள் நேற்று பஞ்சாப் ஆட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு வித்தியாசமாக பதில் அளித்தார்.
அதில்.. நீங்கள்தான் இது என்னுடைய கடைசி சீரிஸ் என்று முடிவு செய்துவிட்டீர்கள். நான் இல்லை என்று கூறி இருந்தார்.
மொத்தத்தில் தோனி ஓய்வு பெற போகிறாரா அல்லது தொடர்ந்து ஆட போகிறாரா என்பதில் பெரிய குழப்பம் உள்ளது.
இந்த நிலையில்.,. இதுதான் என்னுடைய கடைசி சீரிஸ் என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்று கூறியதை வைத்து மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Highly random, but extremely relatable 😂 pic.twitter.com/fZtiBhj1YN
— Mama | 360° Entertainment (@SriniMaama16) May 9, 2023
அதில், அம்மா ஒருவர் தோசை போதுமா.. அடுப்பை ஆப் பண்ணிடவா என்று கேட்பது போலவும்.. அதற்கு மகன்.. இதுதான் என்னுடைய கடைசி என்று நீங்கள்தான் முடிவு செய்துவிட்டீர்கள்.. நான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறுவதாக மீம் போடப்பட்டு உள்ளது.
தோனி சீரியஸாக சொன்ன அந்த விஷயத்தை வைத்து பல மீம்ஸ்கள் இப்படி போடப்பட்டு இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
-
"8 பேர் காயமான டீமை அடிச்சிட்டு சாமி போட்ட ஆட்டம் இருக்கே" சுப்மன் கில்லை வெளுக்கும் சிஎஸ்கே மீம்ஸ்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications