இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன? சென்னையில் நிலவரம் இதுதான்!
சென்னை: நாடு முழுக்க 74வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் அதே விலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருப்பது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.
முன்னதாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. முன்னதாக இந்தியாவில் கடந்த 2 மாதம் முன் தினமும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது.
இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. தேர்தல் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.
தினமும் 80 பைசா வீதம் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. இதனால் முன்பு 70 ரூபாய்க்கு இருந்த பெட்ரோல், டீசல் 100 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. பல மாநிலங்களில் விலை 100 ரூபாயை தாண்டி 110 என்ற அளவை கூட எட்டியது.
இதனால் காய்கறிகள் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை தீவிரமாக உயர்ந்தது. மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவீதமாக உயர்ந்தது. கடந்த 24 வருடங்களில் இதுதான் மிக அதிகம் ஆகும். நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. மக்களின் கடும் எதிர்ப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.
அதன்பின் பெட்ரோல் டீசல் விலையில் இன்று வரை எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. .
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications