ரயில் பெட்டிகளின் கலருக்கு பின்னாடி இவ்ளோ காரணம் இருக்கா? சிவப்பு vs புளூ நிற கோச்களின் வித்தியாசம்
சென்னை: ரயிலில் பயணம் செய்யும் பலரும் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் ரயில் பெட்டிகள் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். ஆனால் இந்த நீல நிறத்திற்கும், சிவப்பு நிற பெட்டிகளுக்கும் இடையே நிற வித்தியாசம் மட்டுமின்றி இந்த இரண்டு நிற பெட்டிகளுக்கும் இடையே வேறு முக்கிய காரணமும் உள்ளது. அது பற்றி இங்கே பார்க்கலாம்.
ரயில்களில் அடிக்கடி பயணம் செய்யும் நபராக இருந்தால், இருவேறு வண்ணங்களில் ரயில் பெட்டிகள் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். அதாவது நீல நிறத்திலான பெட்டி மற்றும் சிவப்பு நிற பெட்டிகள் அடிக்கடி கண்ணில் தென்படும். எழும்பூர், செண்ட்ரல் போன்ற ரயில் நிலையங்களுக்கு அடிக்கடி செல்லும் பயணிகள் என்றால் எப்படியும் சிவப்பு, புளூ நிறத்திலான ரயில்களை காண முடியும்.

இதில், பெரும்பாலான ரயில் பெட்டிகள் புளூ நிறம் கொண்டவகையாத்தான் உள்ளது. சரி அதெல்லாம் இருக்கட்டும்... நேரடியாக விஷயத்திற்கு வாருங்கள் என நீங்கள் நினைப்பது புரிகிறது.. இங்கே விஷயம் என்னவென்றால், புளூ மற்றும் சிவப்பு நிறத்திலான பெட்டிகள் வெறுமனே.. சாதாரண நிற வித்தியாசமாக இருக்கும் என நினைத்தீர்கள் என்றால் அது தவறு. இந்த இரண்டு நிற பெட்டிகளுக்கும் இடையே கலர் வித்தியாசம் மட்டுமின்றி வேறு முக்கிய காரணமும் உள்ளது. அது பற்றி இங்கே பார்ப்போம்.
சிவப்பு நிற பெட்டிகள்: இந்திய ரயில்வேக்கு ஐசிஎப் மற்றும் லிங்க் ஹோப்மன் பஸ்ச்(LHB) ஆகியவற்றின் மூலமாக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதில், எல்.ஹெச்.பி என்பது ஜெர்மன் டெக்னலாஜியுடன் தயாரிக்கப்படுகிறது. சிவப்பு நிறத்திலான ரயில் பெட்டிகளை ராஜ்தானி போன்ற ப்ரீமியம் ரயில்களில் இயக்கப்படுவதை பார்த்து இருக்க முடியும். டிஸ்க் பிரேக், சொகுசான பயணம் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.
200 கிலோ மீட்டர் வேகம் வரையில் இயக்கும் திறன் கொண்ட ரயில்களில் இந்த சிவப்பு நிற பெட்டிகள் இயக்கப்படுகிறது. பஞ்சாப்பின் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டியில் உள்ள தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது இந்த சிவப்பு நிற ரயில் பெட்டிகளில் பிரீமியம் சேவையின் பெயர் லேபலும் இணைக்கப்படுகிறது.
புளூ நிற பெட்டிகள்: புளூ பெட்டிகளை பொறுத்தவரை இந்திய ரயில்வே பெட்டி தொழிற்சாலையான ஐசிஎப்-பில் தயாரிக்கப்படுகிறது. புளூ நிற ரயில் பெட்டிகளை பொறுத்தவரை மிகவும் பாதுகாப்பானது ஆகும். anti-telescopic டிசைனில் தயாரிக்கப்படும் இந்த பெட்டிகள், எளிதில் தடம் புரளாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோச்களும் ஒன்றுக்கொன்று மோதுவதை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதே, நேரத்தில் புளூ கோச்களை எடுத்துக் கொண்டால் சென்னையில் உள்ள ஐசிஎப்பில் தயாரிக்கப்படுகிறது. இரும்பு மற்றும் ஏர் பிரேக்ஸ் தொழில் நுட்பத்துடன் இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதை பராமரிப்பது அதிக செலவு பிடிக்கும். இந்த ரயில்களில் குறைந்த அளவே சீட்கள் இருக்கும். விபத்துக்களின் போது இது கொஞ்சம் அபாயம் மிக்கது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications