“சிக்னல்” கொடுத்த கரு நாகராஜன்.. கண்டுக்காத விபி துரைசாமி! பாஜக பிரஸ் மீட்டில் முரண் -கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ வெளியானதாக கூறி ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து புகாரளித்த பாஜக நிர்வாகி விபி துரைசாமி செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்கு அங்கேயே கரு.நாகராஜன் திருத்தம் செய்து கொடுத்தார்.

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதனை தமிழ்நாடு பாஜக கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

அதில், "திமுக தலைவரும், தமிழக முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலினின் மகன் திரு.உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் திரு.சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் பேசியிருந்த ஒலி நாடாவின் உண்மைத் தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி, தமிழக பாஜக தலைவர்கள் குழு ஒன்று, மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களை இன்று சந்திக்கவுள்ளது.

Difference of opinion arised in BJP pressmeet between VP Duraisamy and Karu Nagarajan

தமிழக நிதியமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், இந்த ஒலி நாடா பொய்யானது, யார் குரலில் வேண்டுமானாலும் இப்படிப் பேசி வெளியிட முடியும் என்று சமாளித்துக் கொண்டிருப்பதால், அவர் அந்த ஒலி நாடாவில் பேசிய அதே கருத்துக்களை நான் பேசுவதைப் போல ஒரு ஒலி நாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன். என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார். தமிழக நிதி அமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்கவேண்டும்.

இரண்டு ஒலி மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். இரண்டு ஒலி நாடாக்களின் உண்மைத் தன்மையை, நீதிமன்றம் விசாரித்துக் கூறட்டும். காலாகாலமாக பதவிகளை எல்லாம் வாரிசுகள் அனுபவித்துக் கொண்டு. தனது கட்சித் தொண்டர்களை போஸ்டர் மட்டுமே ஒட்ட வைத்து ஏமாற்றுவது போல, இது அத்தனை எளிதானதல்ல என்பதை தமிழக நிதியமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சொல்லும் விசித்திரக் கதைகளை, வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால் நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு, நம் தமிழக மக்கள் ஒன்றும் திமுகவினர் அல்ல; அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் தமிழக நிதியமைச்சரை மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மாலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழ்நாடு பாஜகவினர் மனு அளித்தனர். அதை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர்கள் விபி துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்ர். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த விபி துரைசாமி, "நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுத்து தடயவியல் விசாரணை செய்து இந்த உண்மையை கண்டறிந்து அது அவர் குரலாஅல்லது வேறொருவர் குரலா என்று கண்டறிய ஆளுநர் அவர்களை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி கேட்டுக்கொண்டு இருக்கிறது." என்றார்.

அவருக்கு அருகே நின்றுகொண்டு இருந்த கரு நாகராஜன், விபி துரைசாமி கருத்துடன் முரண்படும் வகையில் அவர் குரல்தான் செய்தியாளர்கள் முன்னிலையிலேயே சொன்னார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் விபி துரைசாமி தொடர்ந்து பேசினார். அப்போது ஒரு செய்தியாளர் "பாஜகவிலும் ஆடியோ விவகாரம் கடுமையாக வந்துகொண்டு இருந்தது. இப்போது இந்த விவகாரமும் வந்துள்ளது. இதை உறுதிபடுத்துவது எப்படி?" என்று கேட்டார். இதற்கு பதிலளித்த துரைசாமி, "அதற்குதான் ஆளுநரிடம் வந்து இருக்கிறோம்." என்றவுடன் கரு.நாகராஜன் "இதற்கு பதில் சொல்லி இருக்கிறார்." என்றவுடன் விபி துரைசாமி திரும்பி அவரிடம் என்னெவென்று கேட்டுவிட்டு தனது பேச்சை தொடர்ந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+