மதுராந்தகம் தொகுதியில் கொடூரம்.. 5ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை!
சென்னை: மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி சிறுமி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் அந்தச் சிறுமியின் பெற்றோர் சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்ற நிலையில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் 10 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. தவெக ஆட்சி அமைந்தது முதல் நாள்தோறும் பாலியல் குற்றங்களும், கொலைச் சம்பவங்களும் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கேள்விக்கு உள்ளாக்கி வருகின்றன.
இந்தச் சூழலில், இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட கொங்கரை பகுதியில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
