சார் உங்கள டிஜிட்டல் அரெஸ்ட் பண்ணிருக்குது..ஒன்றரை கோடியை ஆட்டைய போட்ட கும்பல்! சிக்கியது எப்படி?
சென்னை : சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் மும்பை குற்ற பிரிவிலிருந்து பேசுவதாகவும் அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாகவும் கூறி சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த கும்பலை போலிசார் கைது செய்திருக்கின்றனர். கடந்த சில தினங்களாக டிஜிட்டல் கைது மோசடி அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் கைது என்றால் என்ன? மோசடி பேர்வழிகள் சிக்கியது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்..
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வயதானவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நபர்கள் பெண்களை குறிவைத்து அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து பேசி மோசடி நடைபெறுவதாகவும், எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே சட்டவிரோத பணப் பறிமாற்றம் தங்கள் வங்கிக் கணக்கில் நடைபெற்றுள்ளதாக, தொழிலதிபர்களை மிரட்டியும், டிஜிட்டல் கைது செய்துள்ளதாகக் கூறி சைபர் கிரைம் மோசடி நடப்பதாகவும், போலீசார் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீநிவாசவர்மா என்பரின் கைபேசிக்கு அறிமுகமில்லாத நபரிடமிருந்து whats appல் மும்பை இணைய வழி குற்றப்பரிவிலிருந்து பேசிகிறோம் என்றும் தங்கள் வங்கி கணக்கில் முறையற்ற சட்டவிரோதமான பண பரிவர்த்தணைகள் நடந்துள்ளது என்றும் உங்களுக்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பானை வந்துள்ளது. எனவே 0 எண்ணை அழுத்தவும் உங்களுக்கு தகவல் வரும் எனவும் புகார்தாரருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 0 எண்ணை அழுத்தியவுடன் மறுமுனையில் அறிமுகம் இல்லாத நபர் உங்களை Digital ARREST செய்துள்ளோம் இந்த வழக்கில் மேல் நடவடிக்கையை கைவிட வேண்டுமென்றால், கைது செய்வதை தவிர்க்க ஸ்ரீநிவாசவர்மா பணம் கட்டவேண்டும் என்றும் கூறியதால் கடந்த 24.08.2024 முதல் 28.08.2024 நான்கு நாட்களுக்கு பல தவணைகளாக மொத்தம் ஒரு கோடியே பதினைந்து லட்சம் (1,15,00,000) ரூபாய் செலுத்தி உள்ளார்.
அதன் பின்பு மேற்படி தனது பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவரவே இது சம்மந்தமாக 1930 -யை தொடர்பு கொண்டு ஸ்ரீநிவாசவர்மா புகார் அளித்துள்ளார். இது சம்மந்தமாக இணைய வழிகுற்றப் புலனாய்வு பிரிவு தலைமையகத்தில் Cr.No.41/2024 U/s. 316(2), 318(4) BNS & Sec. 66D of IT (Amendment) Act, 2008. வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் புகார்தாரரின் பணம் சட்டவிரோதமாக் சென்ற Vin Power Energy Solutions Private Limited company- SBI accountக்கு சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டது.
மேற்படி அந்நிறுவனத்தின் வங்கி கணக்கை பயன்படுத்தி வரும் இயக்குநர்களான விஸ்வநாதன் , ஜெயராமன் , சுனில் குமார் ஆகியோர்களை கைது செய்து அவர்கள் வங்கிகணக்கில் உள்ள பணம் 52 லட்சம் முடக்கப்பட்டது. மேற்படி அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே பொதுமக்களுக்கு போலீசார் சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன்படி," மின்னஞ்சல்கள் மற்றும் இணையதள இணைப்புக்களை கவனமாக கையாளுங்கள். தூண்டில் மின்னஞ்சல்கள், சைபர் தாக்குதல் நடத்துபவர்கள் உங்கள் கணினியை அணுகுவதற்கான பொதுவான வழியாகும். சந்தேகத்திற்குரிய அறிமுகமில்லாத அனுப்புனர்கள் அனுப்பும் இணையதள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். ஏதாவது இணையதள இணைப்புக்களை லிங்க்குகளை கிளிக் செய்வதற்கு முன்பு அது முறைப்படியானதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் இணைப்புகள் மற்றும் மின்னணு கோப்புக்களை கிளிக்செய்வதற்கு முன்பும் அல்லது ஏதேனும் தகவல்களை பதிவிறக்குவதற்கு முன்பும் மின்னஞ்சல்களின் சட்டப்பூர்வமான தன்மைகளை உறுதி செய்து கொள்ளவும்.
மென்பொருள் கோப்புக்கள் மற்றும் மென்பொருள் செயலிகளை பதிவிறக்கம் மென்பொருள் பதிப்புகளை செய்யும்போது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் வழங்குநர்கல்டமிருந்து பதிவிறக்கம் செய்யவும் மற்றும் போலியான தவிர்கவும். ஏனெனில் அவை தீங்கு செய்பவையாக இருக்கலாம்.
நம்முடைய இரகசிய அழைப்புக்கள் அல்லது அளிக்க வேண்டாம். தகவல்களை பகிர்ந்து ஏமாற வேண்டாம். தொலைபேசி மின்னஞ்சல்கள் மூலம் வரும் தகவல் கோரிக்கைகளுக்கு பதில்
வலுவான கடவுச்சொல்லை பயன்படுத்தவும். ஒவ்வொரு கனத்திற்கும் தனிபட்ட மற்றும் சிக்கலான கடவுச் சொற்களை உருவாக்கி அவற்றை அவ்வப்போது மாற்றவும்.
சமூக ஊடகங்கள் அல்லது பாதுகாப்பற்ற தளங்களில் முக்கியமான தகவலை பகிர்வதை தவிர்க்கவும்.(உங்கள் முகவரி மற்றும் நிதி தொடர்பான விவரங்கள்).
சைபர் அரெஸ்ட்" என்பது சட்டத்திலேயே இல்லை. சைபர் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) என்று எவராவது கூறினால் அது நிச்சயமாக ஒரு மோசடி என்று உடனடியாக போலீசில் புகார் செய்யுங்கள். அறியவும். அதுபற்றி
நீங்கள் லாட்டரி சீட்டை வாங்கவில்லை என்றால் அதில் பரிசு பெறுவது சாத்தியமா? மிகவும் கவனமாக இருக்கவும். சைபர் குற்றத்தால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் நடவடிக்கை கோர் சைபர் கிரைம் டோல் ப்ரீ ஹெல்ப் லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணைதளத்தில் புகாரை பதிவு செய்யவும்." என கூறியுள்ளனர்.
-
விருதுநகரில் உல்லாசமாக இருந்த பெண்ணிடமே ரூ.80 லட்சம்.. சமார்த்திய போலீஸ் ஏட்டுக்கு ட்விஸ்ட் -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காவலர் செய்த தரமான சம்பவம் -
IPS Transfer: உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்.. 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு! -
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி











Click it and Unblock the Notifications