ஏஐ வைத்து அரசியல்.. மாறி மாறி அடித்துக்கொள்ளும் திமுக vs தவெக vs அதிமுக.. இந்த வீடியோவை பாருங்க!
சென்னை: வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த முறை வெறும் பொதுக்கூட்டங்களும், போஸ்டர்களும், பேச்சுகளும் மட்டும் போதாது என்று நினைக்கும் அரசியல் கட்சிகள், AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளன. திமுக, அதிமுக, பாஜக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என எல்லா கட்சிகளுமே இந்த டிஜிட்டல் ரேஸில் குதித்துள்ளன.
ஏஐ மூலம் மாறி மாறி வீடியோ வெளியிட்டு விமர்சனம் செய்வது, மாஸ் டிரான்ஸ்பார்ம் வீடியோ வெளியிடுவது என்று தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மோதி வருகிறது. தவெகவும் இந்த ஏஐ வீடியோ டிரெண்டில் குதித்துள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK): திமுகவின் நிறுவனரான மறைந்த அறிஞர் அண்ணாவை AI மூலம் உருவாக்கி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அண்ணா, விஜய்யை "தம்பி வா" என்று அழைத்து வாழ்த்துவது போலக் காட்டியது பெரிய விவாதமானது.
திமுக: ஏற்கனவே மறைந்த கலைஞர் கருணாநிதியை மேடைகளில் பேச வைத்து கவனம் ஈர்த்தது. இப்போது பெரியாரின் கருத்துக்களை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல AI-ஐ பயன்படுத்துகிறது.
கட்சிகளின் புதிய யுக்திகள்
அதிமுக: எந்தெந்த ஊர்களில் மக்கள் என்ன நினைக்கிறார்கள், எந்தத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதைத் துல்லியமாகக் கணிக்க AI மென்பொருள்களைப் பயன்படுத்துகிறது.
பாஜக: பிரதமர் மோடியின் ஹிந்திப் பேச்சுகளை அப்படியே அச்சு அசல் தமிழ் குரலில் மாற்ற AI-ஐ பயன்படுத்தி வருகிறது. இது கிராமப்புற மக்களிடம் மோடியின் பேச்சை எளிதாகக் கொண்டு சேர்க்கிறது.
கலாய்ப்புகளும் மோதல்களும்
நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், எதிர்க் கட்சித் தலைவர்களைக் கிண்டல் செய்யவும் AI பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக திமுக சார்பாக எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். அதில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பாஜகவிற்கு அடிமையாக இருப்பதாக வீடியோ வெளியிட்டு உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி மோடிக்கு கால் அமுக்குவது போல.. மோடி சொன்னதை செய்வது போல எடப்பாடியை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். இதற்காக பாடல் ஒன்றும் கூட எழுதி உள்ளனர். அந்த பாடல் எடப்பாடி பழனிசாமிக்கு துல்லியமாக லிப் சிங்க் ஆவது போல வீடியோ வெளியிட்டு உள்ளனர். சோரா, ஜெமினி மூலம் வீடியோ எடுத்து, லெவன்த் லேப் மூலம் பாடல் பாட வைத்து அதை வீடியோவாக வெளியிட்டு கிண்டல் செய்து உள்ளனர்.
அதேபோல் விஜயை பனையூர் பண்ணையார் என்று கிண்டல் செய்தும் அதிமுக தரப்பு வீடியோ வெளியிட்டது. இதில் முழுக்க முழுக்க ஏஐ காட்சிகளை பயன்படுத்தி இருந்தனர். இன்னொரு பக்கம் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரின் ஆசியை விஜய் பெறுவது போல இன்னொரு வீடியோவும் தவெக தரப்பினர் ஏஐ மூலம் வெளியிட்டு இருந்தனர்.
தொழில்நுட்பம் ஒருபுறம் வளர்ந்தாலும், எதிர்தரப்பினரைப் பழிவாங்க AI பயன்படுத்தப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் (X) மற்றும் வாட்ஸ்அப் தளங்களில் எதிர்க் கட்சித் தலைவர்களைக் கிண்டல் செய்யும் வகையிலான "டீப்ஃபேக்" (Deepfake) வீடியோக்கள் மற்றும் மீம்கள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
அதே சமயம் "மறைந்த தலைவர்களின் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் AI-ஐ பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது," என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications