சந்திரமுகி போல பேசுகிறார் பிரேமலதா.. அதை மறந்து கூட்டு சேர்ந்துள்ளது அதிமுக.. தினகரன் பொளேர்!
சென்னை: பிரேமலதா விஜயகாந்த் சந்திரமுக போல பேசுகிறார். அதை மறந்து விட்டு அதிமுகவினர் பேசுகின்றனர் என்று டிடிவி தினகரன் தாக்கியுள்ளார்.
தினகரன் தலைமையிலான அமமுகவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தினகரன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை சந்திரமுகி என்று விமர்சித்தார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய தினகரன், நமக்கு எதிரி அதிமுக மட்டுமல்ல திமுகவும்தான். அவர்களுக்கு எதிரான எதிர்ப்பை மிகக் கடுமையாக தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
பாமகவும் தேமுதிகவும் போட்டியிடும் தொகுதிகளில் அவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியதை நாம் எடுத்துக் கூறினாலே நம்மால் எளிதாக வெல்ல முடியும் என்று பேசிய தினகரன் 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதே வேட்பாளர்கள்தான் போட்டியிடுகிறார்கள். நமது பலம் என்ன என்பதை மக்களிடம் நிருபிக்கவே நாம் கூட்டணி அமைக்கவில்லை.
நம்மை பார்த்துதான் அதிமுகவும் திமுகவும் பயப்படுகின்றனர் என்றெல்லாம் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் பிரேமலதா சந்திரமுகியை போல பேசினார். ஆனால் அதிமுகவினர் அதையெல்லாம் மறந்து விட்டனர். இப்போது அவருடனே கூட்டணி வைத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களை எளிதாக மறைத்து விட முடியாது என்று கூறிய தினகரன் கூட்டணிக்காக இவர்கள் நாணல் போல வளைகின்றனர். மக்களுக்காக இல்லை என்று பேசிய தினகரன் தொடர்ந்து மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் விமர்சித்தார்.
இவர்களின் நடவடிக்கைகள் விசித்திரமாக இருக்கிறது என்றவர் 21 தொகுதிகளின் தெர்தளையுமே தள்ளி வைக்க திட்டமிட்டனர் ஆனால் தேர்தல் ஆணையத்தை மீறியே இப்போது தேர்தல் நடைபெறுகிறது. வழக்கு இருக்கிறது என்று காரணம் காட்டி 3 தொகுதிகளின் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர். இப்படி வழக்கு இருக்கிறது என்று காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்கிறார்கள் என்றால் நாட்டில் தேர்தலே நடைபெறாது என்றும் தினகரன் பேசினார்
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications