லியோனி இப்படி சொல்லிட்டாரே.. "ஜொள்ளு பார்ட்டி".. அதைவிடுங்க.. ஆலமரம் திமுகவுடன் மோதாதீங்க.. பெருமிதம்
திண்டுக்கல் லியோனி விழா ஒன்றில் பேசும்போது, பாஜகவை சரமாரியாக பேசியுள்ளது ஷேர் ஆகி வருகிறது
சென்னை: திண்டுக்கல் லியோனி பாஜகவையும், தமிழக மாநில தலைவர் அண்ணாமலையையும் விமர்சித்து பேசிய வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.
பட்டிமன்ற பேச்சாளராக அறிமுகமாகி, பிறகு பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் திண்டுக்கல் ஐ.லியோனி... இப்போது தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராகவும் உள்ளார்..
பாஜகவை சாடி லியோனி பேசி வரும் பேச்சுக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.. சில தினங்களுக்கு முன்பு லியோனி ஒரு மேடையில் பேசியபோது, பாஜகவை கிண்டலடித்து பேசியிருந்தார்.

கன்ட்ரோல்
நான் பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் எவ்வளவு நேரம் பேசுவது என்று கேட்பேன்.. நீங்க எவ்வளவு நேரமாவது பேசுங்க.. நாங்க 10 நிமிஷத்தில் போயிடுவாம் என்று சொல்வார்கள்.. ஆளில்லாமல் வெறும் நாற்காலியை பார்த்து பேசறதுக்கு நான் என்ன பாஜககாரனா? அதிமுககாரனா? முல்லா ஒரு கதை சொல்வார்.. 2 பேரும் ஒரு கழுதையில் ஏறி, வாடா பக்கத்து ஊருக்கு போய்ட்டு வரலாம் என்று கிளம்பினார்களாம்.. அந்த பாஜக என்ற கழுதையோ, கன்ட்ரோல் இல்லாத கழுதை.. அதுபாட்டுக்கு ஓடுது.. எங்கெங்கோ ஓடுது..

2 கழுதை ஒரே குதிரை
கழுதை பின்னாடி உட்கார்ந்துட்டு இருந்த ஒருவர், தொப்பென்று கீழே விழுந்துவிட்டார்.. என்னை விட்டுவிட்டு போய்ட்டீங்களே என்று அவர் கதறுகிறார்.. இன்னொருவரோ, அந்த பாஜக கழுதை மேல ஏறி டெல்லிக்கே போய்ட்டார்.. "நான் கழுதையில வந்திருக்கேன், நம்ம கழுதைதான்" என்று சொல்கிறார்.. அதற்கு டெல்லியில், "2 பேரும் சேர்ந்து ஒரே குதிரையில் வாங்க, அப்பதான் நான் உங்களிடம் பேசுவேன் என்று சொல்லிவிட்டார்கள்.. இன்னைக்கு அந்த கட்சிக்கு வந்த நிலைமையை பாருங்க" என்று கிண்டலடித்திருந்தார்.

ஷேரிங் வீடியோ
இந்நிலையில், லியோனி நேற்றுமுன்தினம் திமுக நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசியிருந்தார்.. அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதிலும் லியோனி பாஜகவை விமர்சித்து சொன்ன கதையை, திமுகவினர் ஷேர் செய்தும் வருகிறார்கள்.. லியோனி பேசியபோது, "பெண்களின் கையில் பொருளாதார சுதந்திரத்தை தந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.. மாதம் 1000 ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு உயர்கல்விக்கு தந்த ஆட்சி.. நாளை ,பட்ஜெட்டில் 1000 ரூபாய் உரிமைத் தொகையை வழங்க போகிற ஆட்சி, இந்த திராவிட மாடல் ஆட்சி

ஆம்பளைங்க நினைக்கலாம்
இந்த ஆம்பளைங்க நினைக்கலாம், ஏற்கனவே இந்த பொம்பளைங்க நம்மள மதிக்க மாட்டேங்கறாங்க.. பஸ்ல வேற ஃப்ரீயா போறாங்க.. ஆனால், நான் காசு தந்து பஸ்ஸில் போயிட்டு இருக்கேன்.. படிக்கிற பொம்பள பிள்ளைகளுக்கும் 1000 ரூபாய் தந்துட்டாங்க.. நாளைக்கு பட்ஜெட்டில் தரப்போறதையும் அவங்க கிட்டயே தரப்போறாங்களே.. எங்க கிட்டயும் பணம் தந்தால், நாங்களும் குடும்பத்தை பார்த்துப்போமே என்று புலம்புகிறார்கள்.. ஒரு பெண் கையில் அந்த 1000 ரூபாய் தரப்பட்டால், நகைச்சீட்டு, பட்டுப்புடவை சீட்டு போட்டு, திருமணம் முடிக்கும் தன் மகளுக்கு 5 பவுன் நகையை எடுக்கும் சாமர்த்தியம் பெண்களுக்கு உண்டு. அதனால்தான், இலவச தொகை, கருணை தொகை என்றெல்லாம் வைக்காமல், உரிமை தொகை என்ற பெயரில் தரும் தலைவர், திமுக தலைவர் ஸ்டாலின்.

ஜொள்ளு பார்ட்டி
பிஜேபி என்றால் ஜொள்ளு பார்ட்டி என்றுதான் எல்லோரும் சொல்றாங்க.. உண்மையில் அங்கே அதுதான் நடக்கிறது. எவ்வளவு பெரிய பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள்கூட சிக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிஜேபிக்கு ஒரு தலைவர் இருக்கிறார் அண்ணாமலை. அவர் எதை பார்த்தாலும் குற்றம் கண்டுபிடிப்பவர். எதுக்கெடுத்தாலும் குறை சொல்பவர். இப்படித்தான் ஒரு போலீஸ் எஸ்.பி. 5 மாடி கட்டிடம் ஒன்றில் மாட்டிக்கிட்டார்.. கீழே நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. ஐயோ என்னை காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. என்று சத்தம் போட்டார். உடனே போலீஸ்காரர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள்.

ஆலமரம் திமுக
4 பேர் கீழே ஒரு வலையை பிடித்துக் கொண்டு, "சார் நீங்கள் அப்படியே குதிச்சிடுங்க.. நாங்கள் உங்களை கெட்டியா பிடித்துக் கொள்கிறோம்" என்றார்கள். அவரும் அதை நம்பி மேலிருந்து கீழே குதித்தார். அவர் வலையை நெருங்கி வரும்போது, வருவது எஸ்.பி. என்றதுமே அந்த நாலு பேரும் வலையை விட்டுவிட்டு விறைப்பாக நின்றபடி சல்யூட் அடித்தார்கள். அந்த எஸ்பி நிலைமை என்ன ஆகி இருக்கும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க. கீழே விழுந்து கை, கால்கள், முகம் எல்லாம் உடைந்து போனதுதான் மிச்சம். இதே நிலையைத்தான் அண்ணாமலையும் சந்திப்பார். திமுக என்ற ஆலமரத்தோடு மோதிய எவரும் ஜெயித்தது இல்லை என்பதை அவர் இன்னும் உணரவில்லை" என்றார் லியோனி.
-
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ் -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள்












Click it and Unblock the Notifications