சென்னைக்கு முதல்முறையாக வந்த திண்டுக்கல் நந்தினிக்கு.. முதல்வர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
சென்னை: முதல்வர் ஸ்டாலினை பார்த்த போது அவர் தனக்கு கொடுத்த பரிசு என்ன என்பது குறித்து திண்டுக்கல் நந்தினி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அரசு உதவி பெறும் அண்ணாமலையார் பள்ளியை சேர்ந்த நந்தினி. தந்தை சரவணக்குமார் ஒரு தச்சுத் தொழிலாளி. அவரது தாய் பானுப்பிரியா இல்லத்தரசி. திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி நந்தினி 10 ஆம் வகுப்பில் 491 மதிப்பெண்களை பெற்றிருந்தார். இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இதுகுறித்து நந்தினி ஒரு டியூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் 595 மதிப்பெண்கள் எடுப்பேன் என எதிர்பார்த்தேன். ஆனால் 600-க்கு 600 என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. மொழிக்கு எல்லையே கிடையாது. அதனால் புக்கில் இருப்பதை மட்டும் படிக்காமல் தேடி தேடி படிப்பேன். என் குடும்ப கஷ்டங்களை பார்த்து நான் என் குடும்பத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போக நினைத்தேன்.
அதற்கு படிப்பு ஊன்றுகோலாக இருந்தது. அப்பாவால் சில நேரங்களில் காசு இல்லாததால் சில பொருட்களை வாங்க முடியாது. ஒரு திண்பண்டங்களை கூட வாங்க முடியாத சூழல் இருக்கும். இதை நான் மாற்ற வேண்டும் என நினைத்தேன். அப்பாதான் எனக்கு ஆணிவேர். இத்தனை கஷ்டங்களை அடைந்து போராடி என்னை படிக்க வைத்தார்.

அவர் மட்டும் என்னை கஷ்டப்பட்டாவது படிக்க வைக்க வேண்டும் என நினைக்காவிட்டால் என்றைக்கோ எனது படிப்பு நின்று போயிருக்கும். பேச்சு போட்டி,கவிதை போட்டிகளில் கலந்து கொள்வேன். அப்படி ஒரு முறை பாரதியாரின் பிறந்தநாள் அன்று கவிதை போட்டிக்கு சென்றேன். 128 பேர் தேர்வானார்கள், அதில் நானும் ஒருத்தி. எனக்கு பரிசுகளை அனுப்பினார்கள். என் பெயர் அந்த போட்டியை நடத்திய செய்தித்தாளில் வந்தது.
அது போல் பேச்சு போட்டியில் நான் கலந்து கொண்டதை வைத்து புத்தகத் திருவிழாவில் என்னை பேச அழைத்தார்கள். நான் பேசியதை பார்த்து நிறைய பேர் என் அப்பாவிடம் வந்து பாராட்டினார்கள். பாரதியாரும் தமிழும் வேறு இல்லை என்பதை அவருடைய கவிதைகளை படித்து தெரிந்து கொண்டேன்.
அதனால் ஆண்டுதோறும் அவருடைய பிறந்தநாள், இறந்தநாளில் அவருக்கென நேரம் ஒதுக்கி கவிதை எழுதி வைத்துக் கொள்வேன்.

எதிர்பாராமல் கிடைத்த இந்த மகிழ்ச்சி
என் எதிர்காலம் முழுதும் தொடர
என் நெஞ்சம் ஏங்குகிறது
அதற்கு பாராட்டு தெரிவித்த
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல
என் மனம் ஏங்குகிறது.
அனைவருக்கும் நன்றி! என தனது 600-க்கு 600 மதிப்பெண்களை பெற்றது குறித்து நந்தினி கவிதை கூறினார்.
இதைத் தொடர்ந்து நந்தினி கூறுகையில் முதல்வர் சாரை பார்ப்போம் என கனவில் கூட நினைக்கவில்லை. முதல்முறையாக சென்னைக்கு வந்து முதல்வரை சந்தித்தேன். எனக்கு முதல்வர் டேப் பரிசாக கொடுத்தார். அத்துடன் சாக்லேட் கிப்ட் ஹாம்பரையும் கொடுத்தார். நிறைய போட்டிகளில் தோற்ற போது அந்த தோல்விகள் எனக்கு அடுத்த போட்டிக்கு படிக்கட்டுகளாக இருந்தது என்றார்.
இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண்களையே பெறுவார். தினக்கூலி வேலை செய்துதான் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். வேலை இருந்தால் வருமானம் கிடைக்கும். இல்லாவிட்டால் இல்லை. எனினும் குழந்தைகளின் படிப்பு என வரும் போது யாரிடமாவது வாங்கியாவது படிக்க வைக்க வேண்டும் என செய்வேன்.
ரிசல்ட் வந்த போது நான்வேலைக்கு சென்றுவிட்டேன். என் மகள்தான் எனக்கு போன் செய்து மார்க் சொன்னார். நான் என்ன மார்க் வாங்கியிருக்கேன் சொல்லுங்கள் என்றார், அதற்கு நான் ஐநூற்று தொன்னுற்றி என இழுத்தேன். உடனே நந்தினி, இல்லைப்பா 600க்கு 600 மதிப்பெண்களை பெற்றேன் என்றார். என்னால் பேசவே முடியவில்லை. அத்தனை சந்தோஷம்.
முதல்வரை சந்தித்த போது நான் அவரிடம் கூறியது ,நான் நந்தினியை திண்டுக்கல்லிலேயே படிக்க வைக்க நினைத்தேன். ஆனால் இத்தனை மார்க் எடுத்ததால் வெளியூர்களில் கல்லூரிகளில் படிக்க வைத்தால் நிறைய செலவாகும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அவரும் அதிகாரிகளிடம் சொல்லி எங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்தார் என்றார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications