ஸ்டாலின் மட்டுமல்லாது கொரோனா பாதித்த தினேஷ் குண்டுராவ் யாரை எல்லாம் சந்தித்தார்?.. லிஸ்ட் இதோ!
சென்னை: கொரோனா உறுதியான தினேஷ் குண்டுராவ் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தியாகும்.
மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள முக்கிய அரசியல்வாதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா, உமா பாரதி, தமிழகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சித்தராமையா
அமித்ஷா, எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்டோர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள். இந்த நிலையில் தமிழகம், புதுவை, கோவா ஆகியவற்றின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தினேஷ் குண்டுராவ் சென்னையில் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தார். அப்போது தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திமுக பொருளாளர்
அந்த சந்திப்பின் போது குண்டுராவ் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரியுடன் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி ஆர் பாலு, திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு, காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்டோர் இருந்தனர்.

இளைஞர் அணி
அது போல் காங்கிரஸ் சார்பில் கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலும் குண்டுராவ் கலந்து கொண்டுள்ளார். மேலும் வேளாண் மசோதாவுக்கு எதிராக தினேஷ் குண்டுராவ், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானா உள்ளிட்டோர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தியிருந்தனர்.

விசாரணை
அது போல் அவர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களையும் சந்தித்துள்ளார். இது போல் குண்டுராவின் சந்தித்தோரின் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. மேலும் இவர்கள் எல்லாம் யாரை எல்லாம் சந்தித்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications