லஞ்சம் வாங்கியதாக தலைமை செயலகத்தில் செய்தி ஒளிபரப்புத்துறை அதிகாரி கைது.. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி
சென்னை: சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தி ஒளிபரப்புத் துறையின் கண்காட்சி அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வஞ்சம் வாங்குவதும் பெறுவதும் குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யவே கூட லஞ்சம் வாங்கி வருகிறார்கள்.

இதைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உயர் அதிகாரி ஒருவரை லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை கைது: சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள செய்தி ஒளிபரப்புத் துறையின் (கண்காட்சி) கணக்கு உயர் பிரிவு அதிகாரி அன்பரசன் என்பவர் தான் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ₹15 ஆயிரம் கேட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய நோட்டுகள் அவருக்குத் தரப்பட்டுள்ளது. இதைத் தெரியாமல் அன்பரசன் லஞ்சம் வாங்கிய நிலையில், அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
பரபரப்பு: அவருடன் இருந்த உதவியாளர் பாலாஜியும் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. லஞ்சம் வாங்கியதாகத் தலைமைச் செயலகத்திலேயே அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத் துறையும் இந்த கைது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கைது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
அதில், "மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் புகார் அளித்திருந்தார். அவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கண்காட்சி நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்பாமல், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் புகார்தாரரிடமே கொடுத்து தமிழக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு நேரில் செல்லுமாறு கூறியுள்ளனர்.
15 ஆயிரம் லஞ்சம்: சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகை, கண்காட்சிப் பிரிவு அதிகாரி அன்பரசு, இந்தக் கண்காட்சி நடத்த அனுமதி வழங்க ரூ.15,000/- லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்கத் தயாராக இல்லாததால் மாணிக்கவாசகம் சென்னை விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவை அணுகி புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அன்பரசு உத்தரவின் பேரில் அலுவலக உதவியாளர் பாலாஜி, புகார்தாரரிடம் இருந்து ரூ.15,000ஐ லஞ்சமாகப் பெற்றார். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர், அன்பரசின் கையில் இருந்த 3 உறைகளில் இருந்து கணக்கில் வராத ரூ.90,000/- கைப்பற்றப்பட்டது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications