சென்னை கிண்டி கத்திபாரா அருகே.. சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் பலி.. மேலும் ஒருவர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கத்திபாரா அருகே ஆலந்தூரில் இரு சக்கர வாகனத்தின் மீது சாலை வழிகாட்டி பலகை விழுந்ததில் ஒருவர் பலியாகிவிட்டார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். ஒரு அரசு பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆங்காங்கே பெரிய அளவில் சாலை வழிகாட்டும் பலகைகளை அமைக்கப்பட்டுள்ளன. இந்த பலகைகளின் உதவியுடன் அந்த பகுதிக்கு புதிதாக வருபவர்கள் குழப்பமில்லாமல் செல்ல இது உதவுகிறது.

அந்த வகையில் தாம்பரத்திலிருந்து கோயம்பேடு, கிண்டி, பூந்தமல்லி செல்வது எப்படி என்பதை விளக்கும் சாலை வழிகாட்டும் பலகை உள்ளது. பெரிய அளவிலான இந்த பலகை இரு புறமும் இரும்பு தூண் நிறுவப்பட்டு அதில் பொருத்தப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனம்

இரு சக்கர வாகனம்

இந்த நிலையில் இந்த வழியாக சென்ற இரு சக்கரவாகனத்தின் மீது இந்த பலகை திடீரென விழுந்தது. இதில் இரு சக்கர வாகனம் கடுமையாக சேதமடைந்தது. இதில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பலியாகிவிட்டார்.

பேருந்தின் முன் பக்கம்

பேருந்தின் முன் பக்கம்

அது போல் அரசு பேருந்தின் முன்பக்கம் இருந்த கண்ணாடி கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் கிரேன் மூலம் விழுந்த பலகைகள், இரு சக்கர வாகனத்தை அப்புறப்படுத்தி வருகிறார்கள். காயமடைந்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை.

பலகை விழுந்தது

பலகை விழுந்தது

பலகை விழுந்ததும் பலத்த காயமடைந்ததால் அருகே இருந்தவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர். மேலும் சென்னை முழுவதும் இது போன்று பெரிய சாலை வழிகாட்டும் பலகைகள் இருந்து வரும் நிலையில் இந்த பலகை இரும்பு தூண்களால் பொருத்தப்பட்ட நிலையிலும் எப்படி விழுந்தது என தெரியவில்லை.

40 அடி முதல் 50 அடி

40 அடி முதல் 50 அடி

இதுகுறித்து விசாரணைக்கு பிறகே தெரியவரும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும் என அந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த பலகைகள் எப்படியும் 40 முதல் 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலைகளில் இரும்பு தூண்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பலகை விழுந்தது எப்படி என்பது கேள்வியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+