ஆர்எஸ்எஸ்.. அதிமுகவை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது.. விஜய் மாநாடு குறித்தும் அமீர் பேட்டி
சிவகங்கை: திமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்தினால் என்ன தவறு என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் அமீர், அதிமுக தலைவர்கள் கண்டனம் கூடத் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது எம்ஜிஆர் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்டவர். அவரது கட்சி நிர்வாகிகள் எல் முருகன் கருத்தை கண்டிக்கவில்லை.. அதிமுகவை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது என்றும் இயக்குநர் அமீர் கூறினார். மதுரையில் நடந்தது விஜய் மாநாடு அல்ல ரசிகர்களின் சந்திப்பு என்றும் அமீர் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் மஹாலில் இயக்குநர் கரு.பழனியப்பன் குடும்பத்தார் சார்பில் மத நல்லிணக்க மீலாது விழா நடந்தது இந்நிகழ்ச்சியில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கம் , மத ஒற்றுமை குறித்து கலந்து கொண்டவர்கள் பேசினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரு.பழனியப்பன் கூறும் போது "இந்நிகழ்ச்சியை எனது வீட்டில் நடத்த கூடாது, என நாட்டையும் வீட்டையும் பதட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற என்னத்துடன் அர்ஜுன் சம்பத் அறிக்கை விட்டு எதிர்ப்பு தெரிவித்தார் என கூறினார்.
தொடர்ந்து இயக்குநர் அமீர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் கூறும் போது, " மதுரையில் விஜய் நடத்தியது மாநாடு அல்ல ரசிகர்களின் சந்திப்பு அவ்வளவுதான் விஜய் கட்சி தொடக்கம் முதல் தடுமாற்றத்தில் உள்ளது. காலத்திற்கும் நிலைத்து நிற்கும் கால சூழ்நிலையில் விஜய் உருவாக்க வேண்டும். மாநாட்டில் வாக்கு திருட்டு குறித்தும் விஜய் பேசியிருக்க வேண்டும்.
அதிமுகவை RSS வழி நடத்தினால் என்ன தவறு என்று மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறியுள்ளது பற்றி கேட்கிறீர்கள். ஆனால் அதிமுகவை இதை விட கேவலப்படுத்த முடியாது. ஆர்எஸ்எஸ் காரர்கள் மத நல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் என்று அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர் கூறினார். அவரால் உருவாக்கப்பட்ட கட்சியை ஜெயலலிதா உழைப்பால் வளர்ந்த கட்சியை RSS வழிநடத்தினால் என்ன? தவறு என்று கேட்டதற்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டும். அவர்கள் கண்டிக்காதது வருத்தத்துக்குரியது வேதனைக்குரியது.
கொள்கையுடன் வருபவர்கள் தான் நிலைத்து நிற்க முடியும், திரைத்துறையில் இருந்து பலர் கட்சி ஆரம்பித்து இருந்தாலும் அனைவராலும் வெற்றி அடைய முடியவில்லை. கொள்கையைப் பிடித்து நின்றவர்கள்தான் வெற்றி அடைந்துள்ளனர் " இவ்வாறு இயக்குநர் அமீர் பேட்டியின் போது கூறினார்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்











Click it and Unblock the Notifications