“கடவுள் மீதே விமர்சனங்கள் இருக்கும்போது..” Bison படம் குறித்து.. இயக்குநர் அமீர் சொன்னதை கேளுங்க!
திருப்பூர்: இயக்குநர் மாரி செல்வராஜ் படைப்பில் வெளியாகியிருக்கும் பைசன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த திரைப்பட இயக்குநர் அமீர், "கடவுள் மீதே விமர்சனங்கள் இருக்கும்போது, ஒரு திரைப்படத்திற்கு விமர்சனம் இல்லாமல் இருக்காது" என்று கூறியிருக்கிறார்.
பைசன் திரைப்படக்குழு இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்திருந்தது. இந்த சந்திப்பின்போது, படக்குழுவினரிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அமீர் அளித்துள்ள பதில் கவனம் பெற்றிருக்கிறது.

அமீர் பேசியதாவது, "கருத்து உடன்பாடு உள்ளதால்தான் இந்த திரைப்படத்தில் இணைந்து இருந்தேன். சாதிய, மத மோதல்கள் நீங்க வேண்டும், மனிதர்களை சக மனிதர்கள் நேசிக்க வேண்டும், கடவுள் இருக்கிறது அல்லது இல்லை என்கிற மாபெரும் விவாதங்களை கடந்து அனைத்து மனிதர்களும் ஒரு தாய் வயிற்றிலிருந்து பிறந்தவர்கள், எல்லோரும் சமம் என்கிற கருத்தை பின்பற்றுகிறவன் நான். அப்படி இருக்கும்பொழுது இந்த கருத்தியலை ஒன்றி யார் திரைப்படங்களை கெடுக்கிறார்களோ அவர்களோடு பக்கம் இருப்பது என்னுடைய கடமை என்று நான் நினைக்கிறேன்.
எனவே இந்த திரைப்பட கதையுடன் நான் ஒத்துப் போகிறேன். நீங்கள் கேட்பதைப் போல திரைப்படத்திற்கு சின்ன சின்ன விமர்சனங்கள் வரலாம். கடவுளுக்கே விமர்சனம் இருக்கிறது. இருக்காரா? இல்லையா? என்கிற கேள்வி இருக்கிறது. இருந்தால் நேரில் வர சொல் என்று சொல்லப்படுகிறது. இப்பேற்பட்ட பிரபஞ்சத்தையே உருவாக்கிய கடவுளுக்கு விமர்சனம் இருக்கும்போது, திரைப்படங்களுக்கு விமர்சனம் இருக்கக் கூடாதா!
எனவே அதை கடந்து செல்ல வேண்டும். திரைப்படங்களுக்கு விமர்சனங்கள் அதிகமாக இருக்கிறதா வரவேற்பு அதிகமாக இருக்கிறதா? என்பதைதான் நாம் பார்க்க வேண்டும். திரையரங்குகளில் படம் பார்க்கும் 500 பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களா? கிடையாது. ஆனால் திரைக்கதையின் கருத்தில் அவர்கள் ஒன்றி போய் இருக்கிறார்கள். அப்படித்தான் திரைப்படங்களை புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அரசன் திரைப்படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமீர், "அந்த படத்தில் நான் இருக்கிறேனா, இல்லையா என்பது குறித்து இயக்குனர்தான் பதில் அளிக்க வேண்டும் என்னால் சொல்ல முடியாது" என்று கூறியிருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications