சாகும் வரை அரசியல் பேசுவேன்.. கட்சி தொடங்கமாட்டேன்.. சிவாஜியில் ரஜினி சிறந்த நடிகரா? அமீர் பகீர்
சாகும் வரை அரசியல் பேசுவேன். ஆனால் அரசியல் கட்சியை தொடங்க மாட்டேன் என இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.
சென்னை: சாகும் வரை நான் அரசியல் பேசிக் கொண்டே இருப்பேன். ஆனால் அரசியல் கட்சியை மட்டும் தொடங்கவே மாட்டேன் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள செங்களம் வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இந்த வெப் சீரிஸின் இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன், இயக்குநர் அமீர், நடிகை வாணி போஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் அமீர் பேசும் போது, நான் ஆதிபகவன் படம் இயக்கிய போது சிவப்பு கம்பளம் என்ற படத்தை என்னை இயக்க எஸ்.ஆர். பிரபாகரன் முன் வந்தார். அந்த கதையில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் எஸ்.ஆர். பிரபாகரனுக்காக இந்த விழாவுக்கு நான் வந்தேன்.

த்ரில்லர்
உயிர் தமிழுக்கு என்ற அரசியல் த்ரில்லர் படம் எடுத்து வருகிறேன். இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததற்கு வாழ்த்துகள். கலைக்கு அரசியல் கிடையாது. அந்த வகையில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெருமை. ஆனால் என்னை பொருத்தவரையில் ஆஸ்கர் விருது பெரிய விருது என என்றைக்கும் நான் நினைத்தது இல்லை.

முக்கியத்துவம்
அது எல்லோராலும் பார்க்கப்படுவதால் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வளவுதான். அதனை அந்த நாட்டின் தேசிய விருது என நினைத்துக் கொள்ளலாம். எனக்கு தெரிந்து 30 ஆண்டுகளுக்கு முன் விருதுகளுக்கான அங்கீகாரம் என்பது வேறு. இப்போது எல்லா விருதுகளிலும் அரசியல் உள்ளது. தேசிய விருது, மாநில விருது, தனியார் நடத்தும் விருது இப்படி எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது.

சிவாஜி கணேசன்
இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன். ஹாலிவுட் நடிகர்களே அவரிடம் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள விரும்பினர். ஆனால் அவருக்கு ஒரு தேசிய விருது கூட வழங்கப்படவில்லை. விருதுகள் எல்லாமே லாபிதான். நான் ஒரு போதும் கட்சி தொடங்க மாட்டேன். ஆனால் மரணிக்கும் வரை அரசியல் பேசுவேன். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்திக்கு சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருது கொடுக்கப்பட்டுள்ளது.

ரஜினி சிறந்த நடிகரா
சிவாஜி படத்தில் ரஜினிகாந்தை சிறந்த நடிகர் என்று நான் சொல்ல முடியுமா. அவர் ஒரு என்டர்டெய்னர். அதை மறுக்க முடியாது. அந்த ஆண்டில் வேறு எந்த படத்திலும் யாரும் சிறப்பாக நடிக்கவில்லையா, ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் வீடியோக்கள் வந்து கொண்டிருக்கின்றன. பாஜக எவ்வளவு தரம் தாழ்ந்து அரசியல் செய்யும் என்பதற்கு இது ஒரு சான்று. இவ்வாறு அமீர் தெரிவித்தார். இயக்குநர் அமீர் சமூகம் சார்ந்த கருத்துகளுக்கு குரல் கொடுப்பவர்.
-
“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! -
தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்.. காரணத்தை விளக்கி கடிதம்.. அதிர்ச்சியில் வாசன்! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications