தனுஷ் படத்தை இயக்கியவர்.. இயக்குனரும், நடிகருமான எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனரும், நடிகருமான எஸ் எஸ் ஸ்டான்லி சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். பொம்மை நாயகி, வெள்ளை யானை போன்ற படங்களில் நடிகராக நடித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில், கிழக்கு கடற்கரை சாலை, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போன்ற படங்களை இயக்கியுள்ளார் .

இயக்குனரும் நடிகருமான எஸ் எஸ் ஸ்டான்லி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 58. உடல்நலக்குறைவால் சென்னையில் அவர் காலமானார். நடிகர் ஸ்ரீகாந்த் - சினேகா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தை எஸ் எஸ் ஸ்டான்லி இயக்கினார். தொடர்ண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தையும் இவர் தான் இயக்கினார்.

S S Stanley Cinema Chennai


இதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் ஸ்ரீகாந்த்தை வைத்து மெர்குரி பூக்கல், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களை இயக்கினார். இதன் பின்னர் சில படங்களில் நடிக்கவும் செய்தார். அதன்படி, ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளியான பெரியார் என்ற திரைப்படத்தில், அறிஞர் அண்ணா கேரக்டரில் எஸ் எஸ் ஸ்டான்லி நடித்திருந்தார்.

தொடர்ந்து, விக்ரமின் ராவணன் படத்திலும், ஆண்டவன் கட்டளை நடிகர் விஜய்யின் சர்க்கார் திரைப்படத்திலும், பொம்மை நாயகி படத்திலும் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தில் எஸ் எஸ் ஸ்டான்லி நடித்து இருந்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எஸ் எஸ் ஸ்டான்லி இன்று காலையிலேயே உயிரிழந்தார். எஸ் எஸ் ஸ்டான்லியின் மறைவுக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை வளசரவாக்கம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+