கவர்ச்சி படம்.. நடிகைகள் தான் குறி! சென்னை போலீஸ் கமிஷனரிடம் இயக்குனர் பாலா பரபர புகார்! என்னாச்சு?
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குனர் பாலா தரப்பில் பரபரப்பான புகார் ஒன்றை வழங்கி உள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பாலா. இந்நிலையில் தான் இயக்குனர் பாலா தரப்பில் இன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை வழங்கி உள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறியிருக்கும் தகவல் என்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதுதொடர்பாக இயக்குனர் பாலா சார்பில் வழங்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ் திரைப்பட இயக்குனருக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை. ஆனால் அவரது பெயரில் யாரோ ஒரு மர்மநபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குனர் பாலா எனக்கூறிக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பி உரையாடி இருக்கிறார். மேலும் திரைப்படங்களில் வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசியுள்ளார். அதோடு மட்டுமின்றி கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளார். இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் பாலாவின் கவனத்துக்கு வந்தன.
இதையடுத்து இந்த புகார் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இந்த பெயரில் தொடங்கப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கம் செய்ய வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த புகாருடன் இன்ஸ்டாகிராமில் இயக்குனர் பாலாவின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள அக்கவுண்டின் விபரமும் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. அதோடு இயக்குனர் பாலா தரப்பில் நடிகர், நடிகைகள் மற்றும் நடிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு அறிவுரை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
அதில், ‛இயக்குனர் பாலா திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வை அவரின் உதவி இயக்குனர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே நேரடியாக தொடர்பு கொண்டு செய்து வருகின்றனர். அதனால் சினிமா ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பாக பாலாவின் திரைப்படங்களில் நடிக்க விரும்புபவர்கள் இதுபோன்ற போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடன் இருங்கள்'' என இயக்குனர் பாலா தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
*****












Click it and Unblock the Notifications