Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? திடீரென மருத்துவமனை வெளியிட்ட முக்கிய ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் மூத்த இயக்குநரான பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக பாரதிராஜா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமே விளக்கமளித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத மிக முக்கியமான ஒரு இயக்குநர் என்றால் அது பாரதிராஜா தான். ஸ்டுடியோக்களில் முடங்கி இருந்த தமிழ் சினிமாவை கிராமங்களை நோக்கி அழைத்துச் சென்றவர் பாரதிராஜா. 16 வயதினிலே, முதல் மரியாதை என்று அவர் எடுத்த ஒவ்வொரு படமும் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத படங்களாகவே உள்ளன.

Director Bharathiraja s Health is Improving but needed continues treatment confirms MGM Hospital

பாரதிராஜா உடல்நிலை

84 வயதான பாரதிராஜா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவரது உடல்நிலை தொடர்பாகச் சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவியதால் ஒருவிதக் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கிடையே பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இயக்குநர் பாரதிராஜா கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் குழுவால் அவர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை நிர்வாகம்

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாரதிராஜா கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலையில், அவருக்குத் தேவையான அனைத்துச் சிகிச்சைகளும் முழுமையாக வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், அவரது உடல் உறுப்புகளை நார்மலாக இயங்குவதை உறுதி செய்யத் தேவையான சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள் குழுவினர் அவரது உடல்நிலையை மிக உன்னிப்பான கண்காணித்து வருகிறார்கள்.. பாரதிராஜாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.. அவருக்குத் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை தேவைப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director Bharathiraja s Health is Improving but needed continues treatment confirms MGM Hospital

இயக்குநர்கள்

முன்னதாக இன்று காலை பாரதிராஜாவை நேரில் சந்திக்க இயக்குநர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் மருத்துவமனைக்குச் சென்றனர் பாரதிராஜாவின் குடும்பத்தினரைச் சந்தித்து அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர். ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் பாரதிராஜாவை சந்திக்க அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.

ஆர்கே செல்வமணி

அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, "சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இங்கு வந்துள்ளோம். அவர் நலமாக இருக்கிறார். ஐசியுவில் இருப்பதால் நேரில் சந்திக்க முடியவில்லை. பாரதிராஜா நலமாகவே இருக்கிறார். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமே தகவல்களைப் பகிர்ந்து வருகிறது. எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம். சிலர் வேண்டும் என்றே திட்டமிட்டும் அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். அதை நம்ப வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+