கட்சி தொடங்குகிறார் கவுதமன்.. பேசிக் கொண்டு மட்டும் இருக்க மாட்டோம் என எச்சரிக்கை
சென்னை: நாங்கள் பேசிக்கொண்டு இருக்கமாட்டோம், செயல்பாடுகளே எங்களது வியூகங்கள், ஆகவே ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு தான் இருக்கிறோம், மற்றவர்களின் செயல்பாடுகள் சரியாக இருக்கும்போது அவர்களோடு இணைந்து பணியாற்றவும் தயங்கமாட்டோம் என்று இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் நாளொரு காட்சி பொழுதொரு வடிவம் என்று காட்சிகள் வெகு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், இயக்குனரும் சமூகப் போராளியுமான கவுதமன் நாளை கட்சி தொடங்கவுள்ளார்.

இது குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர் நாளை கட்சி அலுவலகம் திறப்போடு கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்க உள்ளோம் என்று ஆரம்பித்தவரிடம் இப்போது கட்சி ஆரம்பிக்க வேண்டியதன் நிர்பந்தம் என்று கேட்டபோது, நாங்கள் இவ்வளவு நாட்களாக சிறு சிறு குழுக்களாக போராடி வந்தோம். மற்றவர்கள் போராடும்போது அவர்களது கோரிக்கைகள் கொள்கைப் பிரகடனமாகவோ அல்லது அடையாள போராட்டங்களாகவோ இருக்கும். ஆனால் நாங்கள் அப்படியல்ல.
போராட்ட களத்திற்கு சென்றோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரத்தம் சிந்த சிந்த போராடினோம், விவசாயிகள் டெல்லையில் நிர்வாணமாக ஓடியபோது கத்திபாராவை இழுத்துப் பூட்டினோம். 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூட மற்றவர்கள் கண்டனக் குரலை எழுப்பினார்கள். நாங்கள் திருவண்ணாமலைக்கு சென்று போராடியதன் விளைவாகவே அந்தக் குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு வேலை கிடைத்தது.
இப்படி போராடும்போது சில இடங்களில் தீர்வு கிடைக்கிறது. அதையும் தாண்டி அரசியல் அதிகாரம் மூலம் பல அத்து மீறல்கள் நடைபெறுகிறது ஆகவே இது போன்ற அத்து மீறல்களை தடுக்க எங்களுக்கும் அரசியல் என்ற ஆயுதம் தேவைப் படுகிறது. உரிமைகளை மீட்கத்தான் எங்களது போராட்டம் என்றாலும் இருப்பதை இழந்து விடக் கூடாது என்பதே அரசியல் கட்சி ஆரம்பிப்பதன் நோக்கம்
கேள்வி: இப்போது இருக்கின்ற கட்சிகள் கூட இது போன்ற நோக்கங்களுடந்தான் ஆரம்பிக்கப்பட்டது ஆனால் நாளாவட்டத்தில் அவை நீர்த்துப் போகின்றன அல்லது நீர்த்து போக வைக்கப்படுகின்றன, அதோடு மக்களுக்காக என்று பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கவும் செய்கிறார்கள் இருந்தும் மக்கள் இன்னமும் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டிய சூழலில்தானே இருக்கிறார்கள்?
பதில்: நாங்கள் மற்றவர்களைப் போன்று பேசிவிட்டு அரசியலுக்கு வரவில்லை, செயல்பட்டுக் கொண்டு அரசியலுக்கு வருகிறோம், அரசியல் கட்சி தொடங்கி மக்களிடம் செல்லவில்லை மாறாக மக்களோடு மக்களாக நின்றுவிட்டு அரசியலுக்கு வருகிறோம்.
கேள்வி: கட்சி ஆரம்பித்து நடத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, பணபலம், படைபலம் என்று எவ்வளவோ விசயங்கள் எதார்த்த களத்தில் தேவைப்படுகிறது இதை எப்படி சமாளிப்பீர்கள்?
பதில்: பணம் இருக்கிறவன் மட்டும்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை, காசே இல்லாதவனும் திருமணம் செய்து கொள்கிறான் இறுதிவரை திருமண பந்தத்திற்கு நியாயம் செய்கிறான். பணம் இருக்கிற பல நபர்களும் பல முறை விவாகரத்துகளும் செய்தது உண்டு. கட்சி நடத்துவதற்கு பணம் மட்டும் முக்கியமல்ல. அறம் சுமந்து நடந்தால் இந்த சமூகமே உங்களை காக்கும். நாங்கள் இந்த சமூகத்திற்கானவர்கள் சமூகமே எங்களை காக்கும்.
கேள்வி: தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்கள் தேர்தலில் நிற்கும் திட்டம் இருக்கிறதா?
பதில்: சூழல் கருதி முடிவுகளை அறிவிப்போம்.
கேள்வி: இப்போதிருக்கும் சில கட்சிகள் தமிழகத்தில் சில இடங்களில் தீவிரமாக இயங்குகின்றன. சில கட்சிகள் தமிழகம் முழுக்க இயங்குகின்றன நீங்கள் ஆரம்பத்தில் சில மாவட்டங்களை மட்டும் உங்கள் செயல் களமாக கொள்ளப்போகிறீர்களா அல்லது தமிழகம் முழுக்க இயங்கப் போகிறீர்களா ?
பதில்: ஒட்டு மொத்த தமிழினத்திற்கு போராடும் எண்ணத்தோடுதான் களத்திற்கு வருகிறோம்.
கேள்வி: நண்பர்கள் யார் என்பதை விட நமது எதிரிகள் யார் என்று அடையாளம் காண்பது மிக முக்கியம், அரசியல் களத்தில் யார் உங்களது எதிரிகள்? யாரை எதிர்த்து உங்களது அரசியல் வியுகங்கள் இருக்கும்?
பதில்: எங்களது நிலத்தின் மீது, மொழியின் மீது, கலாச்சாரத்தின் மீது அத்துமீறுபவர்கள் அத்தனை பேரும் எங்களது எதிரிகள். அவர்களுக்கு எதிராகவே எங்களது அறவழி போராட்டங்கள் இருக்கும்.
கேள்வி: உங்கள் கட்சி ஏற்கனவே இருக்கின்ற கட்சிகளைப் போல பத்தோடு பதினொன்று என்று இருக்குமா அல்லது மாறுபட்ட கட்சி என்று கூறுவீர்களா ?
பதில்: நாங்கள் பேசிக்கொண்டு இருக்கமாட்டோம், செயல்பாடுகளே எங்களது வியூகங்கள், ஆகவே ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு தான் இருக்கிறோம், மற்றவர்களின் செயல்பாடுகள் சரியாக இருக்கும்போது அவர்களோடு இணைந்து பணியாற்றவும் தயங்கமாட்டோம்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications