திரைக்கதையில் டிவிஸ்ட் வைத்த பாக்யராஜ்.. சங்க தேர்தலை சந்திக்க முடிவு.. அதிரடி திட்டம்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நடக்கும்பட்சத்தில் அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார் என்று இயக்குனர் கே. பாக்யராஜ் தெரிவித்து உள்ளார்.
Recommended Video

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நடக்கும்பட்சத்தில் அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார் என்று இயக்குனர் கே. பாக்யராஜ் தெரிவித்து உள்ளார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி விலகி உள்ளார்.
சர்கார் பட கதை பிரச்சனையை தொடர்ந்து இந்த பதவி விலகல் சம்பவம் நடந்துள்ளது.
சர்கார் பிரச்சனையில் பாக்யராஜ்தான் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி தந்தவர். விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள சர்கார் படத்தின் கதை பிரச்னையை தீர்த்து வைத்தது பாக்யராஜ்தான். இந்த நிலையில்தான் அவர் பதவி விலகி உள்ளார்.
[பின்னாடி இத்தனை விஷயம் நடந்து இருக்கா?.. பாக்யராஜ் பதவி விலக காரணம் என்ன? ]

என்ன வருத்தம்
பாக்யராஜ் தேர்தலில் போட்டியிட்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவில்லை. நேரடியாக இவர் தலைவர் பதவிக்கு தேர்வானார். இது அவருக்கு பெரிய வருத்தமாக இருந்துள்ளது. நேரடியாக வாக்களித்து தேர்தலில் வெற்றிபெற்று இருந்தால், இந்நேரம் நினைத்த முடிவுகளை அதிரடியாக எடுத்து இருக்கலாமே என்று அவர் நினைத்துள்ளார்.

தேர்தலை சந்திக்க முடிவு
அதனால்தான் நியமன பதவி வேண்டாம் என்று விலகி உள்ளார். இவர் சங்க தேர்தலை சந்தித்து தலைவராக முடிவெடுத்துள்ளார். அதை பாக்யராஜ் தனது கடிதத்திலேயே குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தயார் என்று பாக்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்கள் என்ன செய்வார்கள்
அதுமட்டுமில்லாமல், மற்றவர்களை பதவி விலக தான் கோரவில்லை. அவர்கள் பதவி விலகி தேர்தலை சந்தித்தால் நன்றாக இருக்கும் என்றுள்ளார். இது தொடர்பாக அவர் சங்க உறுப்பினர்களை சென்று நேரில் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

நடக்க வாய்ப்புள்ளது
அதன்படி அவரது சங்கத்தில் உள்ள தலைமை பொறுப்பு உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வாய்ப்புள்ளது. இதற்கான தேர்தல் விரைவில் நடக்கலாம். அப்படி நடக்கும்பட்சத்தில் பாக்யராஜ் உடன் எல்லோரும் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications