பின்னாடி இத்தனை விஷயம் நடந்து இருக்கா?.. பாக்யராஜ் பதவி விலக காரணம் என்ன?
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி விலகி உள்ளார்.
Recommended Video

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி விலகி உள்ளார்.
சர்கார் பட கதை பிரச்சனையில் பாக்யராஜ்தான் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள சர்கார் படத்தின் கதை பிரச்னையை தீர்த்து வைத்தது பாக்யராஜ்தான்.
தற்போது அதே பிரச்சனையால் அவர் பதவி விலகி இருக்கிறார். இதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
[ஏ.ஆர். முருகதாஸிடம் கெஞ்சியும் உடன்படவில்லை.. ராஜினாமா கடிதத்தில் கே.பாக்யராஜ் பகீர்! ]

கடும் நெருக்கடி
சர்கார் கதை பிரச்சனை தொடர்பாக இயக்குனர் பாக்யராஜ் கடுமையான நெருக்கடியை சந்தித்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் என்ன மாதிரியான நெருக்கடிகளை சந்தித்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. அவருக்கு அவர் இருக்கும் சினிமா துறையில் இருந்தே சில நெருக்கடிகள் வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டில் பிரச்சனை
அதேபோல் வீட்டிலும் கூட இவருக்கு சில மனக்கஷ்டங்கள் வந்துள்ளது. மகன் சாந்தனு விஜயின் ரசிகர் என்பதால் வீட்டில் சிறிய மனக்கஷ்டம் வந்ததாக கூறப்படுகிறது. சாந்தனு இதை குறித்து டிவிட்டரில் கூட குறிப்பிட்டு இருந்தார். அவருடைய பதவி விலகலுக்கு பின் இதுவும் ஒரு காரணம்தான் என்று சொல்லப்படுகிறது.

ஒரு உறுத்தல் இருந்துள்ளது
அது மட்டுமில்லாமல் பாக்யராஜ் தேர்தலில் போட்டியிட்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவில்லை. நேரடியாக இவர் தலைவர் பதவிக்கு தேர்வானார். நேரடி பொறுப்பில் இருந்து இப்படி முடிவுகளை எடுப்பது அவருக்கு அவ்வளவு சௌகரியமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதுவும் பதிவில் விலகலுக்கு ஒரு காரணம்.

யாரும் எதிராக பேசினார்களா?
இது எல்லாம் இல்லாமல், அவருக்கு சில மிரட்டல்கள் வந்தது என்றும் கூட கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சக்கூடிய ஆள் இல்லை பாக்யராஜ் என்றும் கூறுகிறார்கள். இது அவரது தனிப்பட்ட முடிவு, அவர் விரைவில் வேறு சில முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று தெரிவிக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications