அந்த வார்த்தையை விஜய் பேசல.. போதை, ஆக்ஷன் சீன் வைப்பதே இதற்காகத்தான்.. லியோ பற்றி லோகேஷ் கனகராஜ்!
சென்னை: லியோ ட்ரெய்லரில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வார்த்தை படத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக, 'லியோ' படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லியோ' திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. முன்னதாக 'லியோ' படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. இந்த ட்ரெய்லர் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றாலும், ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருந்ததால் சர்ச்சை வெடித்தது.

விஜய் பேசும் அந்த வசனம் மியூட் செய்யப்படாமல் அப்படியே ஒலித்தது.'லியோ' ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்டவார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக குழந்தைகள், பெண்களின் விருப்பமான ஒரு ஹீரோ, அனைவரின் கவனமும் பெற்ற திரைப்படத்தின் ட்ரெய்லரில் இப்படி பேசியது தவறு என்று விமர்சனங்கள் எழுந்தன.
எனினும், இந்த வசனம், ட்ரெய்லரில் மட்டுமே இடம்பெற்றிருக்கும் என்றும், தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகும்போது, வசனம் மியூட் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, 'லியோ' சிறப்புக் காட்சி தொடர்பாக பிரச்சனை நீடித்து வந்தது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என ஐகோர்ட் தெரிவித்த நிலையில், முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9 மணிக்கு படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், 'லியோ' படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'லியோ' ட்ரெய்லரில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வார்த்தை படத்தில் இருந்து அக்கற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளும் படம் பார்ப்பதால், 'லியோ' படத்தில் அந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. விஜய் படம் என்றாலே சிறு சிறு பிரச்சனைகள் வருகின்றன. லியோ ட்ரெய்லர் மூலம் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்துள்ளோம். லியோ படத்தில் வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'லியோ'படத்தின் ட்ரெய்லரில் வந்த அந்த சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு, அதற்கு எதிர்ப்பு வந்த உடனே மியூட் செய்துவிட்டோம். கெட்ட வார்த்தை பேசியது நடிகர் விஜய் கிடையாது. அந்த கதாபாத்திரம் தான். அந்த வார்த்தை கட்டாயம் திரையில் வராது.
படத்தில் அதிகளவில் போதை மற்றும் ஆக்ஷன் காட்சிகளை காட்டுவது அதை நிறுத்துவதற்காகவே தவிர ஊக்கப்படுத்த அல்ல. இது போன்ற விஷயங்களை விஜய் போன்ற பெரிய நடிகர்கள் சொல்லும்போது அது மக்களிடம் பெரியளவில் சென்று சேரும் என்ற நோக்கத்தில் தான் இந்த கருத்துகளை சொல்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications