RIP Mahendran: சீனியருக்காக தன் சொந்தப் பேரையே மாற்றிக் கொண்ட மகேந்திரன்!
Recommended Video

சென்னை: இயக்குநர் மகேந்திரன் தனது இயற்பெயரை மாற்றிக் கொண்ட கதை சுவாரஸ்யமானது.
பலர் நியூமராலஜிக்காக தனது பெயரை மாற்றிக் கொள்வார்கள். பெரும்பாலும் திரைத்துறையில் இருப்பவர்கள் தங்களது நிஜப் பெயரை மாற்றி, வேறொரு பெயரை வைத்துக் கொள்வது வழக்கம். ஒரு சிலரே பெற்றோர் வைத்த இயற்பெயருடன் சினிமாவில் ஜெயித்துள்ளனர்.

அந்தவகையில், தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆளுமையாக விளங்கிய இயக்குநர் மகேந்திரனின் இயற்பெயர் தேவ.அலெக்சாண்டர். பெற்றோர் வைத்த இப்பெயருடன் தான் அவர் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களைக் கடந்தார்.
விளையாட்டின் மீது தீவிர ஆர்வம் கொண்டவரான மகேந்திரன், பள்ளி, கல்லூரி காலங்களில் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஸ்டேட் ரேங்க்கில் வந்தவர். தனது கல்லூரியில் அவர் மிகவும் மதித்தது சீனியரான எல்.கே.மகேந்திரனைத் தான். காரணம் அவர் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்.
சீனியரின் மீது கொண்ட மரியாதை கலந்த பாசத்தால், தனது பெயரையும் மகேந்திரன் என மாற்றிக் கொண்டார் அலெக்சாண்டராக இருந்த மகேந்திரன். பின்னாளில் சினிமாவில் எவ்வளவோ உயரங்களைத் தொட்ட பிறகும், மகேந்திரன் என்ற பெயரையே தன் அடையாளமாக அவர் ஆக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications