புத்திசாலின்னு நினைப்பு; ஏன் இப்படி பேசுறீங்க; நான் ஓடி ஒளியும் ஆளில்லை; மோகன் ஜி ருத்ரதாண்டவம்!
சென்னை: ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் இடம்பெறாத ஒரு காட்சியை இருப்பதாக அவதூறு பரப்பி வருபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரித்திருக்கிறார் அந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான மோகன் ஜி.
ஜெய்பீம் திரைப்பட பிரச்சனையை மடைமாற்றிவிடும் நோக்கோடு ருத்ரதாண்டவம் திரைப்படம் குறித்து சில அதிமேதாவிகள் பொய் பரப்புரை செய்து வருவதாக கொதித்திருக்கிறார்.
மேலும் திரெளபதி படம் வெளியாகிய போது தாம் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் நின்று பதில் சொன்னதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா
தமிழ் சினிமா உலகுக்கு இது போதாத காலம் போல், தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு திரைப்படமும் ஏதேனும் ஒரு ரூபத்தில் சர்ச்சையில் சிக்கி வருகிறது. நடிகர் சிலம்பரசன் படத்தை ஒரு சிலர் முடக்க நினைப்பதாக கூறி அவரது தாயும், தந்தையும் ஒரு பக்கம் கண்ணீரோடு பேட்டிகள் அளித்து வந்த சூழலில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்துக்கு வன்னியர் சமுதாய அமைப்புகள் மூலம் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

ருத்ரதாண்டவம் படம்
இதையடுத்து நடிகர் சிலம்பரசன் மீது பட்ட ஊடக வெளிச்சம் நடிகர் சூர்யா பக்கம் திரும்பியது. இப்போது என்னவென்றால் திரெளபதி படத்தின் இயக்குநரான மோகன் ஜி, அவரது அடுத்த படைப்பான ருத்ரதாண்டவத்தில் அம்பேத்கர் குறித்து இழிவுப்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இது தொடர்பாக அவரது சொந்த யூ டியூப் பக்கத்திலேயே விளக்கம் அளித்துள்ள மோகன் ஜி, அம்பேத்கர் ஐயா எல்லோருக்குமான தலைவர் என்றும் அவர் குறித்து தனது படத்தில் இழிவான காட்சியை வைக்கவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

சட்டரீதியாக
மேலும், சர்ச்சைக்குரியதாக கூறப்படும் அந்தக் காட்சிகளையும் ஓரிரு நிமிடங்கள் வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இல்லாத ஒரு காட்சியை பொல்லாத ஒரு எண்ணத்தோடு சில புத்திசாலிகள் பொய் பரப்பி வருவதாகவும், தாம் எதற்கும் ஓடி ஒளியக்கூடியவன் இல்லை எனவும் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார் இயக்குநர் மோகன் ஜி. இனியும் ருத்ரதாண்டவம் படம் குறித்து பொய்யான தகவலை பரப்புவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்திருக்கிறார்.

படம் பார்க்காமல்
ருத்ரதாண்டவம் திரைப்படத்தை பார்க்காமலேயே அது தொடர்பாக ஒரு சிலர் விமர்சிப்பது காமெடியாக இருப்பதாகவும் தனது படத்தை பார்த்துவிட்டு அதிலுள்ள குறைகளை கூறினால் தாம் ஏற்றுக்கொள்வேன் எனவும் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்திருக்கிறார். இதனிடையே திரெளபதி படம் வெளியான போது தாம் எங்கும் ஓடி ஒளியவில்லை என இவர் கூறியிருப்பது, சூசகமாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞனவேலை மனதில் வைத்து தான் இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications