Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவணங்குகிறேன்.. வெகுவாகப் பாராட்டிய இயக்குனர் மிஷ்கின்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : இயக்குனர் மிஷ்கின், தமிழக முதல்வர் ஸ்டாலினையும், தமிழக அரசையும் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பேப்பர் ராக்கெட்' வெப் சீரிஸின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் இயக்குனர் மிஷ்கின்.

இந்த நிகழ்வில் பேசிய மிஷ்கின், பள்ளிகளில் திரைப்பட விழா நடத்தும் தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மனம்திறந்து வெகுவாப் பாராட்டினார்.

 கிருத்திகா உதயநிதி

கிருத்திகா உதயநிதி


உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, 'வணக்கம் சென்னை' மற்றும் 'காளி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இப்போது அவர் 'பேப்பர் ராக்கெட்' என்ற வெப் சீரிஸை ஓடிடி தளத்திற்காக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசினார்.

இயக்குனர் மிஷ்கின்

இயக்குனர் மிஷ்கின்

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மிஷ்கின், "எல்லா படங்களும் பெரியவர்களுக்கான படங்களாகவே வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால் குழந்தைகள் எப்படி படம் பார்ப்பது? சினிமா எனும் பிரமாண்டமான அழகியலை குழந்தைகளுக்கு எப்படி சேர்ப்பது என்ற பெரிய வருத்தம் எனக்கு இருந்தது. ஆனால், இன்று எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

இந்தியாவிலேயே முதல் முறையாக முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு பள்ளிகளிலேயே திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்மாதிரி மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

 தலைவணங்குகிறேன்

தலைவணங்குகிறேன்

சமீபத்தில்'தி கிட்' என்ற திரைப்படத்தை பள்ளிகளில் குழந்தைகளுக்காக திரையிட்டிருக்கிறார்கள். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, குழந்தைகள் விவாதித்திருக்கிறார்கள். இது ஒரு மிகச்சிறந்த விஷயம். இதற்காக தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நான் தலைவணங்கி நன்றி சொல்லிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 சிறார் திரைப்பட விழா

சிறார் திரைப்பட விழா

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கலைச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், மாதந்தோறும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான சினிமா திரையிடல் திட்டத்தை 'சிறார் திரைப்பட விழா' என்ற பெயரில் உருவாக்கியுள்ளது தமிழக அரசு. அதன்படி, மாதம்தோறும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான படத்தை திரையிட்டு அந்த படம் குறித்த கலந்துரையாடலையும் நடத்துகிறது.

திறமைகளை வளர்க்க

திறமைகளை வளர்க்க

சினிமாவை திரையிட்டபிறகு கதைக்களம், கதைமாந்தர்கள், உரையாடல், உட்பட ஒட்டுமொத்த திரைப்படம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும் 'ஸ்பாட்லைட்' என்ற நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் சிறப்பாக பதிலளிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பள்ளி அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். இதில் இருந்து 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக சினிமா குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வகையில் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

வரவேற்பு

வரவேற்பு

நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் 'ஸ்கோப்' கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் தரமான திரைப்படங்களைத் திரையிடும் தமிழக அரசின் இந்தத் திட்டத்திற்கு வெகுவான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் இந்தத் திட்டத்தை உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி ஆகியோர் இருந்த மேடையில் பாராட்டிப் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+