உதயநிதி மிரட்டுறாரு.. இவர் என்ன சிவாஜியா.. விடாதீங்க அவரை.. அந்த மனசு இருக்கே.. பூரித்த மிஷ்கின்
உதயநிதி ஸ்டாலினுக்கு டைரக்டர் மிஷ்கின் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்
சென்னை: சினிமாவை விட்டு போயிடுவேன் போயிடுவேன் என்று உதய் மிரட்டிட்டே இருக்கார்.. தயவுசெய்து ரசிகர்கள் யாரும் அவரை போக விடாதீங்க.. அரசியலில் இருந்தாலும், தொடர்ந்து அவர் சினிமாவில் நடித்து கொண்டே இருக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலினுக்கு பிரபல இயக்குனர் மிஷ்கின் உரிமையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகிழ் திருமணி இயக்கத்தின் உதயநிதி நடித்திருக்கும் கலகத் தலைவன் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்தியம் தியேட்டரில் நடந்தது.
அதில் படக்குழுவினருடன் இயக்குனர்கள் மிஷ்கின், சுந்தர்.சி, ராஜேஷ்.எம், நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் பேசிய பலரும் உதயநிதி, திமுகவின் அடுத்த தலைவர் என்பதை மறைமுகமாக பேசினர். இந்த நிலையில், பிரபல டைரக்டர் மிஷ்கின் பேசியது, அனைவரையும் ஈர்த்தது-. மிஷ்கின் பேசியதை, திமுகவினர் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.. அந்த பேச்சின் சுருக்கம் இதுதான்:

சிவாஜி கணேசன்
ஏன் உதய் ரொம்ப முக்கியம் என்றால், நடிப்பில் ஒன்றும் அவர் கமல்ஹாசன் இல்லை, நடிகர் திலகம் சிவாஜியும் கிடையாது.. ஆனால், பண்பில் உதய் மட்டும்தான் தமிழ்சினிமா.. ஏன் அவர் திரும்ப திரும்ப நடிக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்றால், என்னை போல் இயக்குனர்களுக்கு மிகவும் ஈடுபாடு காட்டக்கூடியவர்.. இனிமேல் நடிக்க மாட்டேன் என்று ஒருமுறை உதய் என்னிடம் சொன்னார்.. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.. அடுத்த கழகத்தலைவர் உதய்தான்.. அதில் மாற்றமே கிடையாது..

சைக்கோ
என் படத்தில் வேலை செய்யும்போது, ரொம்ப டென்ஷனான சமயம் அது.. அந்த நேரத்தில் 2 மணி நேரம்கூட உதய் தூங்கவில்லை.. கேரவனில் போய்கூட தூங்கவில்லை.. அதுக்கப்பறம் 4 மணி நேரம் எனக்கு கஷ்டப்பட்டு ஒதுக்கி தருவார்.. சில சமயம் சேரிலேயே உட்கார்ந்து தூங்கிவிடுவார்.. அந்த மாதிரியான கேரக்டர் அவர்.. அவ்ளோ பெரிய குடும்பத்தில் இருந்து வந்து, அவ்வளவு பெரிய சக்திவாய்ந்த குடும்பத்தில் இருந்து வந்து, இப்படி ஒரு எளிமையானவரை தமிழ்சினிமாவில் நான் பார்த்ததே கிடையாது.. அந்த எளிமைக்கு சொந்தக்கார தம்பி உதய்..

PART 2
நான் என்ன சொல்றேன்னா உதய், நீங்க தயவுசெய்து நடிக்கணும்.. வருஷத்துக்கு 365 நாட்களில் 100 நாட்களாவது நடிக்கணும்.. நீங்க இல்லேன்னா தமிழ் சினிமாவே கிடையாது என்று சொல்ல வரவில்லை.. நீங்கள் சினிமாவுக்குள் தொடர்ந்து இயங்கினால், எங்களுக்கு ஒரு பெரிய இன்ஸ்பியரேஷனாக இருக்கும்.. ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ், தயவுசெய்து சினிமாவில் இருந்து ஒதுங்க வேண்டாம்.. நீங்க அரசியலில் பெரிய அளவுக்கு உயர்ந்துட்டீங்க, பெரிய அளவுக்கு போக போறீங்க, இருந்தாலும், இந்த ரசிகர்கள் உங்களை பார்த்துட்டே இருக்கணும்..

ஐஸ்
சைக்கோ பார்ட் 2 இனி என்னால் எடுக்க முடியாது.. ஆனால், உதய்க்காக இன்னொரு படம் நிச்சயம் எடுப்பேன்.. வளர்ச்சி என்பது அவருக்கு நிறையவே உள்ளது.. ஆனால், மனசு அதே மனப்பான்மையுடன் மாறாமல் உள்ளது.. இது ஏதோ ஐஸ் வைக்க பேசவில்லை.. அவருடன் வேலை பார்த்த அனைவருக்குமே அவருடைய இந்த குணம் தெரியும்.. சினிமாவை விட்டு போயிடுவேன் போயிடுவேன் என்று மிரட்டிட்டே இருக்கார்.. தயவுசெய்து ரசிகர்கள் யாரும் அவரை போக விடாதீங்க என்று கேட்டுக் கொண்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications