ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதபடி மருத்துவமனைக்கு வந்த பா.ரஞ்சித்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ராங் படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து கதறி அழுதபடி மருத்துவமனைக்கு வந்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் வசித்து வந்தார். இன்று இரவு 7.30 மணியளவில் தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

armstrong Pa Ranjith chennai murder bahujan samaj party

ஆம்ஸ்ட்ராங்கோடு இருந்த மேலும் இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த நிலையில், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். மேலும் வெட்டப்பட்ட இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும், தப்பிச் சென்ற கொலையாளிகளை தேடும் பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், முக்கியமான தலித் தலைவருமான ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து கதறி அழுதபடி மருத்துவமனைக்கு ஓடி வந்தார் இயக்குநர் பா.ரஞ்சித். இயக்குநர் பா.ரஞ்சித், தலையில் அடித்தபடி கதறி அழுதார்.

டூ-வீலர்களில் வந்த 6 பேர் கும்பல்.. வீட்டுக்கு முன்பாகவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை! அலறிய பெரம்பூர்!


ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்ட தகவல் அறிந்து மருத்துவமனை வளாகத்தில், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் குவிந்திருந்தனர். அவர்கள் கதறி அழுதனர்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்ஸ்ராங் உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சுயேட்சை எம்.சி.. தலித் மக்களுக்கான போராளி.. யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? அதிர வைத்த படுகொலை!

இயக்குநர் பா.ரஞ்சித், பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கோடு நெருங்கிய நட்பும் அன்பும் கொண்டவர். இயக்குநர் பா. ஞ்சித் தனது சிறுவயதில் இருந்தே பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் பேசியுள்ளார் பா.ரஞ்சித்.

அதேபோல, பா. ரஞ்சித் நடத்தி வரும் வானம் கலைத் திருவிழா, 'மார்கழியில் மக்களிசை’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் ஆம்ஸ்ட்ராங். இந்நிலையில் தனது நண்பரும், வழிகாட்டியுமான ஆம்ஸ்ட்ராங்கின் உயிரிழப்பால் கதறி அழுதுள்ளார் பா.ரஞ்சித்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+