ஹேய் என்னங்டா! எனக்கே டயலாக்கு இல்லையா! இந்த படம் ஓடாதுடா! AD-களுக்கு செல்ல சாபம்விட்ட விஜயகாந்த்
சென்னை: விஜயகாந்த் நடித்து பெரிய ஹிட்டாகிய ஒரு படம் ஓடவே ஓடாது என சொன்னதாக இயக்குநர் உதயகுமார் தெரிவித்தார்.
விஜயகாந்த் மறைந்தாலும் அவரது நல்ல குணங்கள் குறித்தும் படங்களில் அவரை இயக்கிய அனுபவங்கள் குறித்தும் பலர் கூறி வருகிறார்கள். இதை பார்த்து ரசிகர்களும் தொண்டர்களும் பூரித்து போகிறார்கள். விஜயகாந்த் மறைந்து 20 நாட்களுக்கு மேலாகியும் அவரது இறப்பை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத சூழல் உள்ளது.

இந்த நிலையில் சன் நியூஸ் சேனலுக்கு இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: விஜயகாந்தையும் திரைப்படக் கல்லூரியையும் பிரிக்க முடியாது. நானும் அந்த கல்லூரியை சேர்ந்தவர்தான். ஊமை விழிகள் எனும் படத்தை 7 நாட்களில் எடுக்கலாம் என முடிவு செய்தோம்.
அப்போது பெரிய நடிகர்கள் யாரும் முடியாது என சொல்லிவிட்டார்கள். இதையடுத்து விஜயகாந்தை அணுகினோம். அவர்தான் எங்களை உட்கார வைத்து பேசினார். என்ன செய்ய போறீங்க என கேட்டார். அதற்கு நாங்கள் 7 நாட்களில் ஊமை விழிகள் படத்தை எடுக்க போகிறோம் என்றோம். அதற்கு விஜயகாந்த் 7 நாட்களிலா எப்படி என்றார்.
நாங்கள் 3 அணிகளாக பிரிந்து செய்வோம் என விளக்கினோம். அப்போது திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஆர்வத்தை பார்த்த விஜயகாந்தோ ஏம்ப்பா நான் 70 நாட்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன். நீங்கள் நிதானமாக படம் எடுங்கள். எனக்கு அதே சம்பளத்தை கொடுத்தால் போதும் என்றார்.
பின்னர் சின்னகவுண்டர் படம் குறித்து சொன்னேன். அதில் துண்டை இடுப்பில் கட்டுனா கோயிலுக்கு போறான், தோளில் போட்டா பஞ்சாயத்துக்கு போறான், அப்படி தூக்கி வச்சா பட்டைய கிளப்புறான்- இதுதான் கேரக்டர். ஊரே பார்த்து கையெடுத்து கும்பிடும் அவர் ஒரு நாள் ஊருக்கு முன்பு தலை குனிந்து சென்றார். அதுக்கு காரணம் என்ன- இதுதான் கதை, இதுக்கு மேல் எதுவும் கேக்காதீங்கன்னு சொன்னேன்.
நட்புக்கு இலக்கணம் ராவுத்தர்- விஜயகாந்த்தான். தான் ஒரு பெரிய நடிகர் என விஜயகாந்த் நினைத்ததே இல்லை. விஜயகாந்துக்கு இந்த படம் ஓடும்னே நம்பிக்கை இல்லை. பொழுதுபோக்குக்காக அவர் சின்ன கவுண்டர் படத்தில் நடித்தார். அந்த படத்தில் சின்ன கவுண்டரை பற்றி எல்லாரும் ஒவ்வொரு டயலாக்கை சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

ஆனால் விஜயகாந்துக்கு டயலாக்கே இருக்காது. இதை என்னிடம் நேரடியாக கேட்காமல் என் அசிஸ்டென்டுகளை கூப்பிட்ட விஜயகாந்த் , ஹே என்ன உதய் எனக்கு டயலாக்கே வெக்க மாட்டானா, அவன் அவன் பேசுறான், நான் பாட்டுக்கு சும்மாவே நின்னுகிட்டு இருக்கேன் என்னங்கடா நடக்குது. இந்த படம் ஓடாதுனு சொன்னார்.
அதன் பிறகு நான் விஜயகாந்தை அழைத்து சொன்னேன், இந்த படத்தில் ஹீரோவாகிய உங்கள் கேரடக்டர் உன்னதமானது. ஊரே உங்களை பற்றி பேசும் போது நீங்களும் உங்களை பற்றி பேசினால் நல்லா இருக்காது என்றேன். உடனே புரிந்து கொண்டு அது குறித்து கேட்பதையே விட்டுவிட்டார். இவ்வாறு உதயகுமார் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications