’பேட் கேர்ள்’ படத்தை முதல்ல பாருங்க.. அரைவேக்காட்டுத்தனமாய் பேசக் கூடாது! ஆர்கே செல்வமணி பொளேர்!
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன், அனுராக் கஷ்யாப் இணைந்து தயாரித்திருக்கும் பேட் கேர்ள் படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் பிராமண பெண்ணை அவதூறாக சித்தரிப்பதாக பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் பிரபல இயக்குனரும், ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி.
அனுராக் காஷ்யப், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம், பேட் கேர்ள் என்ற படத்தை தயாரித்துள்ளனர். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வர்ஷா பாரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் டீசரை வெளியிட்டனர்.
பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் பருவ பெண்ணின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், முதல் காதல், முதல் முத்தம் என இளமை கனவுகளையும் பெற்றோரின் கட்டுப்பாடு அவர்களை விட்டு பிரிந்து தனியாக வாழும் வாழ்க்கை, அவளது காதல் தேர்வுகள் என ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை குறித்து விவரிப்பதாக படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என படம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், படத்தில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண்ணாக அவர் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே படத்தை பாராட்டிய இயக்குனர் பா.ரஞ்சித், பேட் கேர்ள்ஐ பார்க்க நேர்ந்தது, இது உண்மையிலேயே தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம்! இப்படிப்பட்ட துணிச்சலான கதையை ஆதரித்ததற்காக இயக்குனர் வெற்றிமாறன் மகத்தான பெருமைக்கு உரியவர். அஞ்சலி சிவராமன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என கூறியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்திருந்த திரவுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி, ஒரு பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த குலத்திற்கு எப்போதும் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம். வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் & கோவிடம் இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும். இது போன்ற படங்களை உங்கள் சொந்த சாதிப் பெண்களுடன் முயற்சி செய்து, முதலில் உங்கள் சொந்த குடும்பத்தாரிடம் காட்டவும்" என காட்டமாக கூறியிருந்தார்.
மேலும் இந்த படத்திற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்ஆர் சேகர் உள்ளிட்ட பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும், தமிழ்நாடு பிராமணர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளன. இதனால் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது என்றே கூறலாம். இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல இயக்குனரும் ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி.
இது தொடர்பாக பேசியுள்ள அவர்," வீட்டில் சாப்பாடு கொதித்துக் கொண்டிருக்கிறது. அப்போது சில அரிசிகள் வெளியே வந்து விழும். அதனால் சாப்பாடு வேகவில்லை என சொல்ல முடியாது. அதேபோல் தான் ஒரு படத்தின் டீசரை பார்த்து விட்டு கருத்து சொல்வது தவறு. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த அரங்கேற்றம் படத்தின் டீசரை இப்போது வெளியிட்டால் அந்தப் படத்திற்கு 100 மடங்கு எதிர்ப்பு வரும். அந்த படத்தினை முழுமையாக பார்த்து விட்டு தான் கருத்து சொல்ல வேண்டும். பேட் கேர்ள் படத்தின் டீசர் உள்ள காட்சிகள் சரியானதா அல்லது தவறானதா என்பதை படம் வந்த பிறகுதான் சொல்ல வேண்டும். படம் பார்க்காமல் கருத்து சொல்வது அரைவேக்காட்டுத்தனமானது என்பது தான் எனது கருத்து" எனக் கூறியிருக்கிறார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications