தனுஷ், A.R.ரஹ்மான் வரிசையில்.. சீனு ராமசாமி! 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவிப்பு
சென்னை: சினிமா பிரபலங்கள் பலர் சமீபத்தில் விவாகரத்து குறித்த அறிவித்து வருகின்றனர். இப்படி அறிவித்த தனுஷ், ஏ. ஆர். ரஹ்மான் வரிசையில் தற்போது பிரபல இயக்குநர் சீனு ராமசாமியும் இணைந்திருக்கிறார். தனது 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தனது x தளத்தில், "அன்பானவர்களுக்கு வணக்கம் நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார்.

இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம். அன்புடன் சீனு ராமசாமி" என பதிவிட்டுள்ளார்.
சாமானிய மக்களின் வாழ்க்கையை திரைக்கதையாக வடிவமைப்பதில் சீனு ராமசாமி உச்சம் தொட்டிருக்கிறார் என்றே சொல்லலாம். தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை மற்றும் மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றளவும் நல்ல திரைப்படங்களுக்கான முன்னுதாரணமாக சொல்லப்படுகின்றன. ஆனால் இந்த படங்களின் வணிக வெற்றி என்பது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. திரைத்துறையில் அவரது பயணம் இப்படி இருக்கையில், தற்போது தனிப்பட்ட வாழ்க்கையில் சில முடிவுகளையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு ஏராளமான திரை நட்சத்திரங்கள் விவாகரத்து பெற்றிருக்கின்றனர். 2024 ஆண்டு விவாகரத்திற்கான ஆண்டாக அறியப்படும் அளவுக்கு, விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமை இருக்கிறது. அதே நேரம், விருப்பமில்லாத வாழ்க்கையிலிருந்து விலகி இருப்பதற்கும் முழு உரிமை இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் தற்போது விவாகரத்துகள் அதிகரித்துள்ளன.
விவாகரத்துகள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிப்பதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அவர்கள் சிறார் வயதில் இருக்கும்போது அவர்களுடைய வளர்ச்சியில் குடும்ப பிரிவு என்பது பலமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications